ஷங்கருக்காக காலா கெட்-அப்பை மாற்றிய ரஜினி

ஷங்கருக்காக காலா கெட்-அப்பை மாற்றிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்காக ரஜினிகாந்த் வெள்ளைத் தாடியுடன் காணப்பட்டார். பொது விழாக்களில் கலந்துக் கொண்டபோதும் அதே கெட்-அப்பில் கலந்துக் கொண்டார்.

இப்போது ரஜினியின் காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்துவிட்டாராம் ரஞ்சித்.

எனவே, மீண்டும் ஷங்கர் இயக்கிவரும் 2.0 பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார் ரஜினி.

இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக தன் வெள்ளை தாடியை ஷேவிங் செய்துவிட்டு, இதில் கலந்துக் கொள்ளவிருக்கிறாராம்.

விரைவில் பொது நிகழ்ச்சிகளில் ரஜினியை தாடியில்லாமல் பார்க்கலாம்.

உலக சாதனை படச்சு நடப்பான்.; மெர்சல் தடையை பாடலாக்கிய விவேக்

உலக சாதனை படச்சு நடப்பான்.; மெர்சல் தடையை பாடலாக்கிய விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vivek wrote about Mersal issues in Magic songமெர்சல் படம் பெரும் எதிர்பார்ப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு பிரச்சினை, விலங்குகள் நல வாரிய பிரச்சினை ஆகியவை முடிந்தது.

தற்போது மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சில திரையரங்குகளும் இயங்காமல் இருந்து வருகிறது.

இதனால் தீபாவளிக்கு மெர்சல் வருமா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இப்படியாக பல பிரச்சினைகளை மெர்சல் சந்தித்து வருவதை பாடலாசிரியர் விவேக் தன் ட்விட்டரில் பாடலாக பதிவிட்டுள்ளார்.

இது மெர்சல் படத்தில் மேஜின்மேனாக வரும் விஜய்க்கு எழுதப்பட்ட போனஸ் பாடல் ஆகும்.

Lyricist Vivek wrote about Mersal issues in Magic song

அந்த பாடல் வரிகள் இதோ….

mersal lyrics vivek

முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தில் சூப்பர்ஸ்டார்-பவர்ஸ்டார்

முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தில் சூப்பர்ஸ்டார்-பவர்ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pawan-Kalyan-25-First-Lookஎம்ஜிஆர்-சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் விஜய், அஜித் ஆகியோர் வருகின்றனர்.

ரஜினி படங்கள் பல சாதனைகள் படைத்து வந்தபோதிலும் இதுவரை விஜய்யோ, அஜித்தோ அந்த சாதனைகளை முறியடிக்கவில்லை.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் பிடிக்க முயற்சி வருவதாக கூறப்படுகிறது.

(ரஜினி ரசிகர்களே கோபப்படாதீங்க.. முழுசா படிங்க)

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக எமோஜியை பெற்றது விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான்.

தற்போது அந்த எமோஜியை ரஜினியின் 2.0 படத்திற்கும் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோல் தெலுங்கின் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் 25வது படத்திற்கும் எமோஜியை பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

First time Rajini going to get 2nd place after Vijay

கிறிஸ்துமஸ் ரேஸில் விக்ரம்-விஜய் ஆண்டனி? சிவகார்த்திகேயன் தாக்குபிடிப்பாரா.?

கிறிஸ்துமஸ் ரேஸில் விக்ரம்-விஜய் ஆண்டனி? சிவகார்த்திகேயன் தாக்குபிடிப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram sivakarthikeyan vijay antonyமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

முதலில் இப்படத்தை விநாயகர் சதுர்த்தி வெளியிடவிருந்து, பின்னர் ஆயுதபூஜைக்கு மாற்றி, இறுதியாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை பட டிரைலரில் டிசம்பர் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.

இதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் என கூறப்படுகிறது.

விக்ரம் மற்றும் விஜய்ஆண்டனி படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் வேலைக்காரனுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

எனவே மீண்டும் தள்ளிப் போகுமா? அல்லது மோதுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Sketch Annadurai and Velaikkaran movie may clash on Christmas

மெர்சல் பட டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடைகோரி வழக்கு

மெர்சல் பட டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடைகோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் அடுத்த வாரம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

இப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்க தடைக்கோரி தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தியேட்டர்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நகரங்கள், ஊரகப்பகுதிகள் என வகைப்படுத்தி ஏற்கெனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூடுதல் கட்டணத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழு செயலாற்று கிடப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு இது பொது நல நோக்கம் கொண்டதாக இருப்பதால் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார்.

Mersal movie ticket rates and court case updates

அக்டோபர் 13ல் ரிலீஸாகும் Victoria & Abdul and The Foreigner

அக்டோபர் 13ல் ரிலீஸாகும் Victoria & Abdul and The Foreigner

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Victoria and Abdul and The Foreigner movie release updatesஷ்ராபாணி பாசு எழுதிய நாவலான Victoria and Abdul ஐ தழுவி, லீ ஹாலின் திரைக்கதை அமைப்பில் அமைந்துள்ள படம் தான், Victoria & Abdul.

சரித்திர பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் Judi Dench Victoria மஹாராணியாக தோன்றி நடித்துள்ளார். இவர் Academy விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை என்பது தெரிந்த விஷயம்.

சமீப காலங்களில், James Bond படங்களில் M என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

3 Idiots என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமாகி, Always Kabhie Kabhie, Fukrey, Bobby Jasoos, Sonali Cable போன்ற படங்களில் நடித்துள்ள Ali Fazal இதில் Abdul கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்!

இப்படத்தின் திரைக்கதை, Victoria மஹாராணிக்கும் இந்தியாவை சார்ந்த Abdul என்கிற வேலை ஆளுக்கும் இடையே எழும் மென்மையான, அப்பழுக்கற்ற ஸ்நேகம் பற்றி உணர்வு பூர்வமான விதத்தில் எடுத்து சொல்கிறது.

மஹாராணியின் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் Abdul, மஹாராணியின் உதவியாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த ஆசானாகவும் செயல்படுகிறான்.

உன்னதமான, உயரிய முறையில் உருவான அவர்களது நட்பு, புதிய பரிமாணங்களை தொடுகிறது! தூய்மையின் பிரதிபலிப்பாக விளங்கும் அவர்களது தொடர்பு, சுற்றி உள்ளவர்களுக்கு வேறொரு கண்ணோட்டத்தில் தென்படுகிறது!

Abdul இன் கண்கள் மூலம், இந்த உலகை புதியதொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள், Victoria மஹாராணி!

Eddie Izzard, Adeel Akthar, Michael Cambon மற்றும் Tim Piggot-Smith ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

Thomas Newman இசை அமைக்க, Danny Cohen படத்தின் ஒளிப்பதிவை கையாண்டு உள்ளார்.

Stephen Frears படத்தை இயக்கி உள்ளார்.

42 வது Toronto சர்வதேச திரைப்படபட விழாவில் திரையிடபட்டு பெரும் வரவேற்பு பெற்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

THE FOREIGNER-

ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

Golden Eye (1995), Casino Royale (2006), Vertical Limit (2000), The Mask of Zorro (1998), The Legend of Zorro (2005) போன்ற மகத்தான படங்களை இயக்கிய Martin Campbell, 22 வருடங்களுக்கு பிறகு, முன்னாள் James Bond நடிகர் Pierce Brosnan உடன் மீண்டும் இணைந்து, துணைக்கு action hero Jackie Chanயும் சேர்த்துக்கொண்டு உருவாக்கி உள்ள படம்தான், ‘The Foreigner’

1992 ஆம் ஆண்டு, Stephen Leather எழுதிய நாவலான The China Man ஐ தழுவி, David Marconi திரைக்கதை அமைக்க, 35 million அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்க பட்டுள்ள படமிது!பிரிட்டன் மற்றும் சீன தயாரிப்பான இப்படத்தில், Jackie Chan கூட ஒரு கூட்டு தயாரிப்பாளர்!

London ஐ சேர்ந்த தொழில் அதிபர், Quan (Jackie Chan). எதிர்பாராத சூழ்நிலையில், அவரது டீன் ஏஜ் மகள், கடததப்பட்டு கொல்லப்படுகிறாள்! அரசியல் கலந்த தீவிரவாதம்தான் இதற்கு காரணம் என அறியாவரும் Quan, பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார்!

மேலும் புலனாய்வு செய்யும் போது, பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியான Hennessy (Pierce Brosnan) என்பவரை சந்தித்தால், புரியாத சில புதிர்கள் விடுவிக்கபடும் என்பதை உணர்கிறார்!

படம் முழுவதிலும் action காட்சிகளுக்கு குறைவே இல்லை எனலாம்!

படப்பிடிப்பின் போது, Lambeth பாலத்தில் Double-Decker பஸ் ஒன்றில் அமைக்கப்பட்ட சண்டை காட்சியை நிஜம் என நம்பி, கூடியிருந்தவர்கள், காவல் துறையினர் பால் சென்று Complaint செய்ததாக ஒரு தகவல்; தீவிரவாதிகளின் வருகையால் கலவரம் நடப்பதாக!

2011 இல் Martin Campbell ‘Green Lantern’ என்கிற படத்தை இயக்கி இருந்தார். 6 வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது!

Cliff Martinez படத்திற்கு இசை அமைத்துள்ளார். David Tattersall ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More Articles
Follows