ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and vijay antonyபிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான எமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

முற்றிலும் அரசியல் விருந்தான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் ஒரு கோடி வசூலை கடந்துள்ள இப்படம் தமிழகத்தில் மூன்றே நாட்களில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

‘எமன்’ படத்தின் வரவேற்பை அறிந்த ரஜினி படத்தை பார்த்தாராம்.

அவரும் படக்குழுவினருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வசூல் வேட்டை மற்றொரு பக்கம் ரஜினியின் பாராட்டு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

_Suseenthiranசாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

வருகிற மார்ச் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

அப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது…

படத்தின் இடைவேளை வரை இதுவும் பொழுதுபோக்கு படம்தான் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு இப்படம் முற்றிலும் வேறு ஒரு கதைகளத்தில் இருந்தது.

சாந்தனு மற்றும் ஸ்ருஷ்டியின் நடிப்பு அருமை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Suseenthiran letter about Shanthanus Mupparimanam movie

அந்த கடிதம்…

susee letter

ரஜினியை எப்படி இயக்க வெங்கட் பிரபுக்கு ஆசை தெரியுமா?

ரஜினியை எப்படி இயக்க வெங்கட் பிரபுக்கு ஆசை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Venkat Prabhuசினிமாவின் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

அதுபோன்ற ஆசை இயக்குனர் வெங்கட் பிரபுவையும் விட்டுவைக்கவில்லை.

அவரின் சமீபத்திய பேட்டியில் அதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “ரஜினிக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். அவர் ஒரு மாஸ் ஹீரோ என்றாலும் காமெடியிலும் கலக்குவார்.

எனவே எனக்கு ரஜினியை முழுக்க முழுக்க காமெடி செய்ய வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Venkat Prabhu wish to direct Rajinikanth

சௌந்தர்யா ரஜினி கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்; தனுஷ் சமரசம்

சௌந்தர்யா ரஜினி கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்; தனுஷ் சமரசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Soundarya Rajiniசூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.

இவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவர் அஸ்வினை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு விருந்தில் கலந்துக் கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னை, டி.டி.கே. சாலை வழியாக வந்துக் கொண்டிருக்கும் போது, மௌபரிஸ் சாலை அருகில் நின்ற ஆட்டோ மீது இவரின் கார் மோதியுள்ளது.

இதனால் ஆட்டோ கவிழ்ந்து அதில் இருந்த டிரைவர் மணி என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே இத்தகவலை தனுஷக்கு சௌந்தர்யா தெரிவித்தாகவும், அவர் நேரில் வந்து ஆட்டோ டிரைவரிடம் சமரசம் பேசியதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளாராம்.

இதனால் சௌந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் இப்பிரச்சினை முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் நடிகர் அருண் விஜய்யின் கார் மோதி ஒரு விபத்து நடந்ததும், அவரின் தந்தை விஜயகுமார் சமாதானம் செய்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Soundarya Rajini hits an auto with her car Dhanush solve the issues

பாலா-ஜோதிகா-ஜிவி.பிரகாஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

பாலா-ஜோதிகா-ஜிவி.பிரகாஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bala GVPrakash Jyothikaபாலா இயக்கத்தில் முதன்முறையாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை EON Studios நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

இளையராஜா இசையமைக்க, ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தலைப்புடன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு நாச்சியார் என பெயரிட்டுள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெறும் என அதன் வடிவமைப்பிலேயே தெரிகிறது.

GV Prakash and Jyothika starring Naachiyaar movie first look

 

naachiyar gvp

naachiyaar

அஜித் பர்த்டே & சுதந்திர தினம் இரண்டையும் குறிவைக்கும் விவேகம் டீம்

அஜித் பர்த்டே & சுதந்திர தினம் இரண்டையும் குறிவைக்கும் விவேகம் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vivegamசிவா இயக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசரை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இப்படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழன் அன்று அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதியே வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அறிவிப்பை விரைவில் எதிர்ப்பாக்கலாம்.

Vivegam team targets Ajith Birth day and Independence Day

More Articles
Follows