என்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி

Rajini paid homage to Director Mahendran and shares his memories with himசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களை இயக்கியவர் மகேந்திரன்.

உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை அவர் காலமானார்.

அவரது உடலுக்கு நேரில் சென்ற ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது…

மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் மகேந்திரன். எங்கள் நட்பு சினிமாவைத் தாண்டி ஆழமான நட்பு அது. எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறார் என்பதை எனக்கு காட்டியவர் மகேந்திரன் தான்.

‘முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, ‘உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என்று கடிதம் பாலசந்தர் கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன்.

சமீபத்தில், ‘பேட்ட’ படப்பிடிப்பில் நீண்ட நேரம் பேசினோம். இப்போது இருக்கும் சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகவும் அதிருப்தி, கோபம் இருந்தது.

அவர் எப்பேர்பட்ட மனிதர் என்றால், சினிமாவிலும் வாழ்க்கையிலும் சரி சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.

தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் சாருக்கென்று ஒரு இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini paid homage to Director Mahendran and shares his memories with him

Overall Rating : Not available

Related News

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள்…
...Read More

Latest Post