3 இயக்குனர்களின் கையில் ரஜினி கால்ஷீட்; கடைசி படத்தை இயக்கும் ராஜமௌலி.?

rajini and rajamouliகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் வருகிற ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை முடித்து விட்டு மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த 2 படங்களை முடித்துவிட்டு தன் கடைசி படமாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு முழு வீச்சில் தன் ஆன்மிக அரசியலில் ரஜினி ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

2021ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தான் அவசர அவரசமாக தன் சினிமா பயணத்தை முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post