2.0 ரிலீஸ் தாமதத்தால் முந்தி வரும் காலா; வெளியிடும் லைகா!

Rajini Kaala movie may release on 14th April before 2point0 Release

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுவரை தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட முடிவு எடுத்துள்ளனர்

இதனால் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மிக தாமதமாகி வருகிறது.

இப்படம் முழுக்க முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைப்பதில் கடினமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் வரை தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் தான் தயாரித்துள்ள காலா படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடலாமா? என என்று படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

‘காலா’ படத்தை லைகா நிறுவனம் வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Kaala movie may release on 14th April before 2point0 Release

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More
மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக்…
...Read More
அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…
...Read More

Latest Post