தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘டப்பாங்குத்து’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் திண்டுக்கல் ஐ லியோனி.
இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சி முடித்து விட்டு சென்ற போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அப்போது சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் டிரைலரில் விஜய் பேசிய அந்த தே பையா என்ற கெட்ட வார்த்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசும்போது..
“அபூர்வ ராகங்கள் தொடங்கி இது போன்ற பல கெட்ட வார்த்தைகள் பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு காட்சியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் மீது சேரும் சகதியும் தெறிக்கும். அப்போது கமல் அந்த காட்சியில் இருப்பார். அப்போது இந்த வார்த்தை வரும்.
பெரும்பாலும் கிராமத்து படங்களிலும் வட சென்னை போன்ற படங்களிலும் இது போன்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். முக்கியமாக நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர். அப்படி இருக்கும்போது விஜய் அந்த கெட்ட வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து என்றார் திண்டுக்கல் ஐ லியோனி.
Dindigul Leoni speech about Leo Trailer Dialogue