தமிழ் சினிமாவின் கதவை ரஜினிகாந்த் திறந்த தினம் இன்று..!

தமிழ் சினிமாவின் கதவை ரஜினிகாந்த் திறந்த தினம் இன்று..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini gate scene aboorva raangalஇன்று உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் உயர்ந்துள்ளார்.

இதே நாளில் அதாவது 42 வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் படம் ரிலீஸ் ஆனது.

கே. பாலசந்தர் இயக்கிய இப்படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோருடன் நாகேஷ் நடித்திருந்தார்.

எம்எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகும் போது ஒரு வீட்டின் முன்புறம் உள்ள கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைவார்.

மற்ற நடிகர்களுக்கு இதுபோன்ற காட்சி அமைந்திருக்குமா? எனத் தெரியாது.

அன்று அவருக்காக திறக்கப்பட்ட அந்த கேட், இன்று வரை ரஜினியை சினிமா வீட்டிற்குள் வைத்து கொண்டாடி வருகிறது.

அதற்குமுன்பு இந்திய சினிமாவில் ஸ்டைல் என்ற வார்த்தை இருந்திருக்குமா? தெரியவில்லை.

அதுபோல் ஒரு கருப்பான நிறம் கொண்ட ஒரு மனிதர் இந்திய சினிமாவில் இருந்திருப்பாரா? எனத் தெரியவில்லை.

ஆனால் இன்று கருப்பான மனிதர்கள் எல்லாம் சினிமாவில் நுழைந்து சாதிக்க அவரே காரணமாக இருந்து வருகிறார்.

அதுபோல் தனக்கான ஸ்டைல் ரூட்டை பிடித்து ஒரு அன்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இவரது ரசிகர்கள் இவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தங்கள் தெய்வமாக மதித்து கொண்டாடி வருகின்றனர்.

எனவே அவர்களுக்காக அரசியல் களத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

அதன் முதற்கட்டமாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற உள்ள தமிழருவி மணியன் நடத்தும் அரசியல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 42 வருட சினிமா எண்டரீ தினத்தை #42YearsOfRajinism என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Super star Rajini fans celebrates 42 years of Rajinism on 18th August

rajini first movie gate scene

தனுஷ்-அஜித் நடுவே சிக்கிக் கொள்ளாத விரும்பாத படங்கள்

தனுஷ்-அஜித் நடுவே சிக்கிக் கொள்ளாத விரும்பாத படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 18th August 2017 No tamil movie released due to VIP2 and Vivegam releasesகடந்த வெள்ளிக்கிழமையன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி தனுஷ் நடித்த விஐபி2, உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் ராம் இயக்கிய தரமணி ஆகிய படங்கள் வெளியானது.

இவை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த படங்ளையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

இந்த வாரமே தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், அடுத்த வாரம் நிச்சயம் கிடைக்காது என்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்களாம்.

அதற்கு முக்கிய காரணம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமையே அஜித்தின் விவேகம் ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே இதற்கிடையில் (அஜித்-தனுஷ்) எந்த படங்களும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என கூறப்படுகிறது.

On 18th August 2017 No tamil movie released due to VIP2 and Vivegam releases

ஐரோப்பாவில் ஹாயாக டூயட் பாடும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

ஐரோப்பாவில் ஹாயாக டூயட் பாடும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Keerthy sureshமுதன்முறையாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள பாடலை படமாக்க ஐரோப்பா, குரோடியா நாட்டுக்கு சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இப்பாடலுடன் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து விடும் என தகவல்கள் வந்துள்ளன.

Suriya and Keerthy suresh duet song shooting updates

காமெடி நடிகராக மாறுகிறார் கமல்… அமைச்சர் கடம்பூர் ராஜு

காமெடி நடிகராக மாறுகிறார் கமல்… அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Best Actor Kamalhassan becomes Comedy actor says TN Minister Kadambur Rajuஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து வந்த கமல், தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார்.

முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் என் குரலுக்கு ஆதரவு கொடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லையா? எனவும் கேட்டு இருந்தார்.

இது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கமல்ஹாசனின் கருத்துக்கள் குறித்து கூறியதாவது…

கமல்ஹாசன் சிறந்த நடிகர். ஆனால் அவர் தேவையில்லாமல் அரசியல் கருத்துக்களை கூறி தற்போது காமெடி நடிகராக மாறி வருகிறார்” என்று கூறினார்.

Best Actor Kamalhassan becomes Comedy actor says TN Minister Kadambur Raju

விஷால்-ஆர்யா மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்க… விஷ்ணு விஷால்

விஷால்-ஆர்யா மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்க… விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya-vishnu-vishalவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

சூப்பர் ஜீ புகழ் நடிகர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் விஷ்ணு தன் நெருங்கிய நண்பர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை பற்றி பேசினார்.

அப்போது அவர்கள் திருமணம் செய்துக்கொள்வார்களா? என கேட்டபோது…

எனக்குத் தெரிஞ்ச வரை அவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு அவர்களை சம்மதிக்க வைப்பது கஷ்டம்.

மேரேஜ் நம் லைஃப் ஸ்டைலை முழுமையாக மாற்றும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே போக போக அவர்கள் மனம்மாறி சம்மதிப்பார்கள் என நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Vishal and Arya will not get married says their friend Vishnu Vishal

ரஜினி-அன்புமணி ராமதாஸ் நட்புக்கு பாலமாக இருந்தேன்… – எஸ்.தாணு

ரஜினி-அன்புமணி ராமதாஸ் நட்புக்கு பாலமாக இருந்தேன்… – எஸ்.தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini anbumai ramadoss producer thanuபதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன்.

அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும் மோதல் நடந்த காலத்தில் ரஜினிக்கும், அன்புமணிக்கும் பாலமாக இருந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பெரிய இடத்து பிள்ளை என்றாலும் குணாநிதிக்கு தொழிலில் இருக்கும் டெடிகேஷன் பாராட்டுக்குரியது. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்த குறும்படத்தை போட்டுக் காட்ட நான் முயற்சி செய்வேன்.

ஆளவந்தான் போல ஒரு படைப்பை கொடுத்த கமல்ஹாசன் இந்த குறும்படத்தை பற்றி கணித்திருப்பது உண்மை. இந்த குழுவினர் என் நிறுவனத்திற்கு ஒரு படத்தை செய்து கொடுக்க வேண்டும் என்றார் கலைப்புலி எஸ் தாணு.

தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தின் வெற்றிக்கு காரணம் குணாநிதி. என் சிறந்த மாணவன், நான் நினைத்த ரோமியோ ஜூலியட் நாடகத்தை அரங்கேற்ற முடியாமல் போனதை இந்த குறும்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறான் குணா.

சினிமாவில் நிறைய சம்பாதிக்கலாம், புகழ் பெறலாம் என பலரும் சினிமாவுக்கு வருகிறார்கள். பணம், புகழை தாண்டி கலை ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார் இந்த குணா.

படத்தில் வெறுமனே மாஸுக்காக புகை பிடிக்காமல் கதாபாத்திரத்துக்காக புகை புடித்திருக்கிறார் குணா என்றார் ஜெயராவ்.

மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் பல வித கதைகள், தமிழ் சினிமா கதை சொல்லலில் சாத்தியமில்லை. வணிக நோக்கத்தில் படங்கள் எடுக்கப்படுவதால், நேரடியாக நாங்கள் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படங்களில் சொல்ல முடியும்.

அந்த வகையில் மிகவும் டெடிகேஷனோடு இந்த குறும்படத்தை குணாநிதி மற்றும் குழுவினர் எடுத்திருக்கிறார்கள். இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் இந்த படத்தை நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டும்.

அன்புமணி சார் தர்மதுரை படத்தை பார்த்து விட்டு பாராட்டினார், நல்ல சினிமாவை எப்போதும் ஆதரிப்பவர் அவர் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

ட்ரெண்ட்லௌட் சிதம்பரம், நாயகன் குணாநிதி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பதநிச தயாரிப்பாளர் சங்கமித்ரா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். விழாவில் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்.

I am the reason behind Rajini and Anbumani Ramadoss friendship says Kalaipuli S Thanu

A Stroke of Disssonance short film launch photos

More Articles
Follows