தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன.
மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு தமிழ் நடிகருக்கு ரசிகர் மன்றம் இருப்பது ரஜினிக்கு மட்டுமே.
இவர் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே உள்ளிட்ட தன் ஆரம்பகாலங்களில் வில்லனாகவே நடித்தார்.
அப்போதே ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை மதுரையில் தொடங்கியவர் ஏ.பி.முத்துமணி.
குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற முத்துமணி சுடரே வா.. என்ற பாடல் கூட இந்த ரசிகர் பெயரிலேயே உருவானதாக கூறப்படுகிறது.
ரஜினியின் வீட்டு பூஜை அறையில் தான் முத்துமணியின் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி நேற்று மார்ச் 8ல் உயிரிழந்தார்.
இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் முத்துமணி அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தார் ரஜினிகாந்த் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Rajini die hard fan Muthumani died who launched 1st fan club