லாரன்ஸ் பிறந்தநாளில் ‘ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

லாரன்ஸ் பிறந்தநாளில் ‘ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்தி படம் லட்சுமி பாம் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

இதனையடுத்து லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த தமிழ் படம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பதை ஓரிரு தினங்களுக்கு முன் நம் தளத்தில் பார்த்தோம்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க்கிறார் லாரன்ஸ்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தின் இயக்குனர் யார்? என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனால் ஒருவேளை லாரன்ஸ் இயக்குகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர்.,29ல் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு இப்பட தலைப்பை அறிவித்துள்ளனர்.

இதிலும் லாரன்ஸ் நடிக்கிறார் என்பதை மட்டுமே அறிவித்துள்ளனர்.

’ருத்ரன்’ என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Raghava Lawrence’s next is titled Rudhran

Rudhran first look

செம ஃபிட் தல.. ஹைதராபாத்தை அலறவிடும் அஜித்.; வைரலாகும் போட்டோஸ்

செம ஃபிட் தல.. ஹைதராபாத்தை அலறவிடும் அஜித்.; வைரலாகும் போட்டோஸ்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் நிறைய இடம்பெறவுள்ளதாம்.

இந்த காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடு செல்வதில் பிரச்சனை உள்ளதாம்.

எனவே இந்தியாவிலேயே நல்ல லொக்கேஷனை தேடி வருகிறார்களாம்.

டெல்லியில் எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் முக்கியமான காட்சிகளை தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.

இதில் அஜித் இடம் பெற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார் டைரக்டர் வினோத்.

அப்போது அஜித்தை பார்க்க ரசிகர்கள் திரள அவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தல.

புகைப்படங்களில் அஜித் செம ஃபிட்டாக இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Ajith’s latest pics from Valimai sets go viral

2020-10-29 (1)

2020-10-29

என் உயிர் பற்றி கவலையில்லை.. மக்கள் சொன்னால் செய்கிறேன்..; ரஜினி பெயரில் சுற்றிய போலி அறிக்கை இதோ…

என் உயிர் பற்றி கவலையில்லை.. மக்கள் சொன்னால் செய்கிறேன்..; ரஜினி பெயரில் சுற்றிய போலி அறிக்கை இதோ…

Fake statement goes viral in the name of Rajinikanth“என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

இந்தக் கொரோனா பிரச்னையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், “கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.

அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. நான் துவங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல் நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்தக் கொரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல் நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மக்கள் தீர்ப்பே. மகேசன் தீர்ப்பு.

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!

அன்புடன்

ரஜினிகாந்த்”

Fake statement goes viral in the name of Rajinikanth

BREAKING அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

BREAKING அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

rajinikanthகடந்த் 2017 டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் அவரின் அரசியல் வருகை குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் பேட்ட தர்பார் படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 8 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அண்ணாத்த சூட்டிங் நடைபெறவில்லை.

மேலும் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பும் ரஜினியிடம் இருந்து வரவில்லை.

இதனால் ரஜினி கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உலா வந்தது.

இந்த நிலையில் ரஜினி பெயரில் ஓர் அறிக்கை இணையத்தில் பரவப்பட்டது.

அதில் அரசியல் கட்சி ரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வைரலானது.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று சிலர் நையாண்டி செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில்…

என் பெயரில் வலம் வந்த அந்த அறிக்கை பொய்யானது.
ஆனால் அதில் என் உடல் நலம் பற்றி சொல்லப்பட்ட விஷயம் உண்மை. விரைவில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinis statement regarding his health and Political party launch

அவரின் அந்த அறிக்கை…

rajini statment

ஜர்னலிஸ்ட் ஆபிரகாம் லிங்கன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘பசும்பொன் தேவர் வரலாறு’

ஜர்னலிஸ்ட் ஆபிரகாம் லிங்கன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘பசும்பொன் தேவர் வரலாறு’

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம்.

அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.

இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது.

முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 மணிக்கு “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

நீண்டகாலம் விளம்பர துறையில் கோலோச்சிவரும் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராக பணியாற்றிய எம்.பி. ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்று படத்துக்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

மக்கள் தொடர்பு – நிகில்முருகன்

பின்னணி குரல்- நடிகர் வாகை சந்திரசேகர் MLA

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – தணிகாசலம்

இசை – விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு – ஜீவா ஷங்கர்

நிர்வாகம்,ஆவணங்கள் சேகரிப்பு – மோனிதா

எழுத்து – இயக்கம் – எம்.பி.ஆபிரகாம் லிங்கன்.

தயாரிப்பு – பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கலைச்செல்வி

பத்திரிகையாளர் MP ஆபிரகாம் லிங்கன் இயக்கி @BigPrintKarthik தயாரித்த தேசியதலைவர் பசும்பொன் #முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான “#பசும்பொன்தேவர்வரலாறு” டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா நாளை வெளியிடுகிறார்.

Pasumpon thevar varalaaru digital release on october 30

பொ உ ப கே – PUBG படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு..!

பொ உ ப கே – PUBG படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு..!

Ranagalam promo song பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)
படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்’ (PUBG) படத்தையும் இயக்குகிறார்.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பப்ஜி படத்திற்கு இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே தாதா 87 படத்தில் இவரது இசையில் ‘ஆறடி ஆண்டவன்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

தற்போது PUBG படத்திற்காக விஜய் ஸ்ரீ ஜி-யின் வரிகளுக்கு இசையமைத்துள்ளார்.

முண்டாசு கவி பாரதியாரின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ வரிகளுடன் பாடலைத் துவக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.

இப்பாடலை, பிரபல ராப் இசைக் கலைஞர் ஃபைவ் ஓ (Five O) பாடியிருக்கிறார்.

இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர்.

இவருடைய ஆல்பங்கள் Aizejot, CitadaksReps, Nothing Compares, Nesteijties, Vis Man Ir Arlauts மிகவும் பிரபலமானவை.

சர்வதேச புகழ் பெற்ற ஃபைவ் ஓ, பப்ஜி படத்தின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் புரட்சி செல்வி ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன், அனித்ரா நாயர் , ஆராத்யா, சான்ரியா, சாந்தினி, மொட்ட ராஜேந்திரன், சதீஷ் முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை
இசை வெளியீட்டில் தனி ட்ரெண்ட்டை ஏற்டுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது.

பாடல்கள், லாட்வியாவில் உள்ள ஜெனிஸ் ஸ்ட்ராம் ஸ்டூடியோஸ் (Janis Straume Studios) மற்றும் சிங்கப்பூரில் உள்ள அர்டாண்ட் ஸ்டீடியோஸில் (Ardant Studios) பதிவு செய்யப்படவுள்ளன.

பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இசை சரவெடி வருகிற தீபாவளி தினத்தில் ஆரம்பமாகிறது.

இந்த படம், உலகமெங்கும் 2021 பொங்கலன்று வெளியாகிறது.

Ranagalam promo song from PUBG is out now

More Articles
Follows