மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன்.

இதில் ‘ஜோக்கர்’ படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் ராஜமுருகன் கூட்டணி மீண்டும் இணைய இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இதே ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தில் கார்த்திக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் 2021ல் வெளியான ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக அல்லு அர்ஜூனை மிரட்டியிருந்தார் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி இயக்கிய ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சுனில். (இந்தப் படம் தான் சந்தானம் நடிப்பில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் தமிழில் ரீமைக்கானது.)

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் சில காட்சிகளும் அவர் நடந்து செல்லும் சில காட்சிகளும் இணையதளத்தில் லீக் ஆனது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின்னர் ரஜினி நடிக்கவுள்ள அவரின் 170-வது படத்தை ‘டான்’ பட டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் இதன் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.125-130 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘பொன்னியின் செல்வி-யாக மாறிய அதிதி ஷங்கர்.; ஓ இதான் விஷயமா.?

‘பொன்னியின் செல்வி-யாக மாறிய அதிதி ஷங்கர்.; ஓ இதான் விஷயமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தில் அவரது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து மாடர்ன் பெண்ணாக வளர்ந்த இவர் ‘விருமன்’ படத்தில் அசல் கிராமத்து பெண்ணாகவே நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.

மேலும் அந்த படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் ‘பொன்னின் செல்வன்’ படத்தில் வரும் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷாவை போல அலங்காரம் செய்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதிதி.

அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ சூட் நவராத்திரிக்காக எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் இந்த அதிதி ஷங்கர்.

மீண்டும் அவதாரமெடுக்கும் ‘ஆளவந்தான்’.; கமலை நம்பி களமிறங்கும் தாணு

மீண்டும் அவதாரமெடுக்கும் ‘ஆளவந்தான்’.; கமலை நம்பி களமிறங்கும் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

22 வருடங்களுக்கு முன் தாணு – கமல்ஹாசன் – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் உருவான படம் ‘ஆளவந்தான்’.

இதில் கமல் வில்லன் & ஹீரோ என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

இவர்களுடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் டெக்னிக்கலாக பாராட்டைப் பெற்றாலும் மோசமான தோல்வியை தழுவியது.

இதனால் தயாரிப்பாளர் தாணுவிற்கு பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டது. கமலால் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினை. எனவே தான் இந்த தோல்வி என பல பேட்டிகளை கொடுத்திருந்தார் தாணு.

இந்த நிலையில் இப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மறுபடியும் ரீ- ரீலீஸ் செய்ய உள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்..

அந்த பேட்டியில்…

“1990களில் கமல் அமைத்த திரைக்கதை சரியாக பொருந்தவில்லை.

தற்போது இந்த சூழலுக்கு பொருந்தும்.

இப்போது படம் வெளியானால் நான் இழந்த பணத்தை கூட மீட்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தாணு.

காந்தி ஜெயந்தியன்று ராமர் பூமியில் ‘ஆதி புருஷ்’ விழா; பிரபாஸ் – கீர்த்தி பங்கேற்பு

காந்தி ஜெயந்தியன்று ராமர் பூமியில் ‘ஆதி புருஷ்’ விழா; பிரபாஸ் – கீர்த்தி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது.

அக்டோபர் இரண்டாம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது.

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில், ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

இதனிடையே இயக்குநர் ஓம் ராவத் இயக்கிய ‘ஆதி புருஷ்’ திரைப்படம், டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம், ஐமேக்ஸ் மற்றும் 3 டி யில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பனாரஸ்’ நாயகன் சினிமாவில் நுழைவதை எதிர்த்த குடும்ப அரசியல்வாதி

‘பனாரஸ்’ நாயகன் சினிமாவில் நுழைவதை எதிர்த்த குடும்ப அரசியல்வாதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன்.

‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’.

‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையித் கான், நாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் துவக்கத்தில் ‘பனாரஸ்’ படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரவிச்சந்திரன்…

,’ சமீப காலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும் உலகநாடுகளிலும் வெற்றி பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. அந்த வரிசையில் இந்த பனாரஸ் படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பது இப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால் பேசும்போது…

’வீட்டிலிருந்து இந்நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது என் மனைவி விழாவில் உணர்ச்சி வசப்படாமல் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். ஆனால் என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் இப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளைப் பேசும்படம்” என்றார்.

நாயகி சோனல் மாண்டீரோ பேசும்போது…

“ இதற்கு முன் சுமார் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். விளம்பர டிசைன்களில் நாயகன் பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை” என்றார்.

இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது…

,” இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான்.

இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்’ என்றார்.

அடுத்து பேசிய ‘பனாரஸ்’ நாயகன் ஜையத் கான்….

” நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை.

முதலில் இப்படத்தின் சில காட்சிகளை மட்டும் காசியில் ஷூட் செய்துவிட்டு மீதியை மற்ற லொகேஷன்களில் மேட்ச் செய்துகொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால் காசியில் விநோதமான சில இடங்களால் ஈர்க்கப்பட்டு மொத்தப்படத்தையும் இங்கேயே முடித்திருக்கிறோம்.

படப்பிடிப்பில் ஒரு பக்கம் நாங்கள் காதல் காட்சி எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கில் பிணங்களை எரித்துக்கொண்டிருப்பார்கள்.

எவ்வளவு முரணான நிகழ்வு பாருங்கள். ஆனால் அதுதான் நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் இந்த ‘பனாரஸ்’ படம் என்பது காசியின் புனிதம் கலந்த காதல் கதை” என்றார்.

‘பனாரஸ்’ வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

More Articles
Follows