சாமீ… சாமீ..; ரசிகரின் தந்தைக்கும் உதவிய நடிகர் அல்லு அர்ஜுன்

சாமீ… சாமீ..; ரசிகரின் தந்தைக்கும் உதவிய நடிகர் அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முக்கியமாக ‘புஷ்பா’ படத்திற்கு பிறகு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உருவாகினர்.

இந்த நிலையில் இவரது ரசிகர்களில் ஒருவர் குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுவதாக தகவல் வெளியானது.

அந்த ரசிகருடைய தந்தையின் நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தேவை என தகவல் வந்தது.

இது அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு செல்லவே ரசிகர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழுவினர் மூலம் செய்துள்ளார்.

எனவே அந்த ரசிகர் மன்றம் அல்லு அர்ஜுனை ‘சாமி’ என பாராட்டி பதிவிட்டுள்ளது.

‘புஷ்பா’ படத்தில் ‘சாமி… சாமி…’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது இங்கே கவனிக்கத்தக்கது.

Allu Arjun helps his fan family for medical treatment

இந்தியாவை திணறடித்த ‘த்ரிஷ்யம் 1 & 2’ படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்

இந்தியாவை திணறடித்த ‘த்ரிஷ்யம் 1 & 2’ படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் & மீனா ஜோடியாக நடித்த படம் ‘த்ரிஷ்யம்’.

மலையாளத்தில் இந்த படம் 2013-ம் ஆண்டில் வெளியானது. சில வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட்டானது.

‘த்ரிஷ்யம்’ முதல் பாகம் மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெறவே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் ஜீத்து ஜோசப் இயக்க கமல்ஹாசன் நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.

மேலும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் ‘த்ரிஷ்யம்’ பார்ட் 1 & 2 படங்கள் ஹாலிவுட்டில் (ஆங்கிலம் – கொரியா) ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

அதாவது இந்திய மொழிகள் தவிர்த்து பிற மொழிகளில் த்ரிஷ்யத்தை ரீமேக் செய்ய இந்த நிறுவனம் உரிமை பெற்றுள்ளதாம்.

Drishyam films to be remade in hollywood

என் நடிப்பு எனக்கே பிடிக்காது.. அந்த படம் என் குடும்பத்துக்கே பிடிக்கல – விஜய்சேதுபதி

என் நடிப்பு எனக்கே பிடிக்காது.. அந்த படம் என் குடும்பத்துக்கே பிடிக்கல – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நேரடி மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘கலை மற்றும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் விஜய் சேதுபதி.

அவர் பேசும்போது… “நான் நடித்த படங்களை நான் பார்ப்பதில்லை. காரணம், என்னுடைய நடிப்பு எனக்கே பிடிக்காது. கடந்த 5 ஆண்டுகளாக தான் நடித்த படங்களையே பார்க்கவில்லை

‘மாஸ்டர்’ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. என்னை நானே பார்ப்பது வெட்கமாக இருந்தது.

மக்கள் தங்களது பணத்தையும், நேரத்தையும் கொடுத்து சினிமா பார்க்கின்றனர். அதற்கான பொறுப்புணர்வு படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும்.

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சொல்லும்போது.. ‘சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. சினிமா வெறும் பணத்திற்கானது அல்ல.. அது மிகப்பெரிய பொறுப்பு.

என் அப்பாவை நினைத்தே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை எழுதினேன். என் குடும்பத்தினரே படம் போர் அடிக்கிறது என்றார்கள்.

ஆனால் அந்தப் படத்தை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒரு படத்தின் கலெக்ஷனை வைத்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்து அந்த படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ரசிகர்களே கலெக்சனை பற்றி விவாதிப்பது வருத்தமளிக்கிறது” என்று பேசினார் விஜய் சேதுபதி.

I don’t like my acting.. My family doesn’t like that film – Vijay Sethupathi

மாதவனின் புதிய படத்தை இயக்கும் தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனர்

மாதவனின் புதிய படத்தை இயக்கும் தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் 2022 ஆகஸ்ட் 12ல் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’.

மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியாபவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஜவஹர் மித்திரனின் அடுத்த படம் குறித்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் மாதவன் நடிக்க உள்ள புதிய படத்தை அவர் இயக்க உள்ளார்.

இப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பணியாற்ற உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mithran R Jawahar to direct Madhavan for his next

உங்க எதிர்பார்ப்புக்கும் மேல விஜய்யின் ‘லியோ’ படம்.; ரத்னகுமார் ஓபன் டாக்

உங்க எதிர்பார்ப்புக்கும் மேல விஜய்யின் ‘லியோ’ படம்.; ரத்னகுமார் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக இணைந்து நடித்து வரும் படம் ‘லியோ’.

இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க அர்ஜுன், சஞ்சய் தத் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

தற்போது இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் வசனத்தை இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து இயக்குனர் ரத்னகுமார் எழுதி வருகிறார்.

இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ‘லியோ’ படத்தின் அப்டேட் குறித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது..

“நீங்கள் கேட்ட ‘லியோ’ அப்டேட் கொடுத்துட்டாங்க.. இனிமேல் படம் எடுத்த முடித்த பிறகுதான் அடுத்த அப்டேட் வரும்.

உங்கள் எதிர்பார்ப்பை விட படம் பெரிதாக இருக்கும்.

இது லோகேஷ் கனகராஜின் LCU யூனிவர்சில் வருமா, இல்லையா என்பதை சீக்கிரமே தெரிவிப்பாங்க…”

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் பேசினார் ரத்னகுமார்.

Rathna kumar open talk about leo movie

‘நண்பன்’ குழுமத்தின் விளம்பர தூதுவரானார் ‘பிக்பாஸ்’ ஆரி அர்ஜுனன்

‘நண்பன்’ குழுமத்தின் விளம்பர தூதுவரானார் ‘பிக்பாஸ்’ ஆரி அர்ஜுனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் ஆரி.

ஒரு கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அவர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த நிலையில் தற்போது ‘அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

” அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் என்னுமிடத்தில் நண்பன் குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஆளுகைக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனனை நியமித்ததை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

‘நண்பன்’ என்ற சொல்லிற்கு இந்திய மொழிகளில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருக்கும் தமிழ் மொழி, ‘உண்மையான நண்பன்’ என பொருள் உரைக்கிறது.

அதன் அர்த்தத்திற்கு ஏற்ப உண்மையாக ‘நண்பன் குழுமம்’ பிறருக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக எந்த நிபந்தனையுமின்றி, பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் உதவுகிறது.

மேலும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

இதனூடாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது. ‘கிரீன் பிளானட்’ எனும் ‘பசுமையான பூமி’யை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்காகவும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

நண்பன் குழும நிறுவனங்களில் நண்பன் வென்ச்சர்ஸ், நண்பன் ரியால்ட்டி, நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ், நண்பன் பிரைவேட் ஈக்விட்டி, நண்பன் இ எஸ் ஜி மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

இவைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய சிக்கல்களை எதிர்கொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்கவும், அதனை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தித் தருவதிலும் இணைந்து செயல்படுகின்றன.

அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நண்பன் அறக்கட்டளை’- சுய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான சேவை திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம், விளையாட்டு, கலை, கலாச்சாரம், கிரீன் பிளானட் எனப்படும் பசுமை பூமியை ஊக்குவித்தல், குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குதல் என ஏராளமான திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறது.

இந்த அறக்கட்டளை மூலம் தற்போது உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு இந்த அறக்கட்டளை, தன்னாலான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட நடிகராக அறியப்படுபவர் நடிகர் ஆரி அர்ஜுனன். திரைத்துறையில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 4’ எனும் தனி நபர் திறனறி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதிலும் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் யாரும் பதிவு செய்யாத வகையில், 16 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடமிருந்து விருப்ப வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற இவர், தமிழ்நாட்டில் தன்னலமற்ற வகையில் சேவைகள் செய்தற்காக ‘சிறந்த சமூக செயற்பாட்டாளர்’ என அங்கீகரிக்கப்பட்டவர். இவர் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், வலுவான அர்ப்பணிப்புடன் கூடிய பணியை செய்து வருபவர்.

நண்பன் குழும நிறுவனங்களின் தலைவரும், நிறுவனருமான கோபால கிருஷ்ணன் கூறுகையில், ” நண்பன் குழும நிறுவனங்களின் விளம்பர தூதுவராக நடிகர் ஆரி அர்ஜுனனை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மற்றவர்களுக்கு சேவை புரிவதில் இவருக்கு இருக்கும் ஆர்வமும், நேர்மைக்கான நற்பெயரும், எங்கள் முதலீட்டாளர்களின் நிதி சார்ந்த கனவுகளை உயர்தர நெறிமுறைகளுடன் மற்றும் ஒருமித்த உணர்வுடன் நிறைவேற்றுவதற்கு உதவும் எங்களின் நோக்கத்தை முழுமையாக இணைக்கிறது.” என்றார்.

நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக பங்குதாரருமான நரேன் ராமசாமி கூறுகையில், ” நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பல்வேறு சேவை முயற்சிகள் மூலம் சமூகத்தை காப்பாற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்காக அறியப்பட்டவர். அவருடைய செயல்பாடு, நண்பனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. மேலும் எங்களின் அதிகாரப்பூர்வ தூதராக அவரை முன்னிலைப்படுத்துவதிலும், பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

நண்பன் குழுமத்தின் இணை நிறுவனர்களான மணி சண்முகம் மற்றும் சக்திவேல் ஆகியோர் கூறுகையில், ” நடிகர் ஆரி அர்ஜுனனை நண்பன் குழும குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறோம்” என்றனர்.

ஆரி அர்ஜுனன் நண்பன் குழும விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம், நண்பன் குழும நிறுவனங்கள் மிகவும் நம்பகமான, புதுமையான மாற்று முதலீட்டு தளமாக மாற்றம் பெற்றிருக்கிறது. மேலும் அதன் தொலைநோக்குப் பார்வையை எட்டுவதற்கு சிறந்த பாதையையும் உறுதிப்படுத்தி உள்ளது. ” என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பன் குழும நிறுவனங்களைப் பற்றிய கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள www.nanban.com எனும் இணையதள முகவரியை பார்வையிடலாம்.

Actor AARI ARUJUNAN @Aariarujunan named Brand Ambassador for NANBAN Group of Companies in India ??

#Nanban
#NanbanGroupOfCompanies
#NanbanEntertainment

NANBAN ENTERTAINMENT WILL BE LAUNCHED SOON..

www.nanban.com

@proyuvraaj

‘Bigg Boss’ Aary Arjunan has become the advertising ambassador of ‘Nanban’ group

More Articles
Follows