Where is Pushpa? அல்லு அர்ஜூன் பிறந்த நாளில் ‘புஷ்பா 2’ பட கான்செப்ட் டீசர்

Where is Pushpa? அல்லு அர்ஜூன் பிறந்த நாளில் ‘புஷ்பா 2’ பட கான்செப்ட் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் ’புஷ்பா2’ சீக்வல் திரைப்படம், தெலுங்கு மற்றும் இந்தியா முழுவதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

இதற்குக் காரணம் முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மாபெரும் வெற்றி. அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம், வசனங்கள் போன்றவை பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பல ரசிகர்களையும் கவர்ந்தது.

தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சுகுமார் மற்றும் அணியினர் ‘புஷ்பா2’ படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பினர். அதன்படி படத்தில் இருந்து சிறிய வீடியோ க்ளிம்ப்ஸை ரசிகர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ, புஷ்பா திருப்பதி ஜெயிலில் இருந்து புல்லட் காயங்களுடன் தப்பிவிட்டதாக தலைப்பு செய்தியுடன் தொடங்குகிறது. மேலும், ’புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என்ற கேள்வியும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

இந்த க்ளிம்ப்ஸ் கட் ஆர்வமூட்டுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7 அன்று மாலை 04:05 மணிக்கு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.

‘புஷ்பா2’ படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். பகத் ஃபாசில், அனசுயா, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.

‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் க்ளிம்ப்ஸாக இதன் கான்செப்ட் டீசர் ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.

‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.

Pushpa 2 movie Concept teaser release to allu arjun birthday

BJP கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் விஜய் பட வில்லன் நடிகர்

BJP கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் விஜய் பட வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் ‘புலி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ‘முடிஞ்சா இவன புடி’ என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.

இவை இல்லாமல் ராஜமவுலி இயக்கி சூப்பர் ஹிட்டான ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘கப்ஜா’ என்ற பான் இந்தியா படத்தில் கெஸ்ட் ரோலிங் நடித்திருந்தார் கிச்சா சதீப்.

இவர் இன்று ஏப்ரல் 5 தேதி பாஜக கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

கிச்சா சுதீப்

இந்த நிலையில் பாஜக கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். ஆனால் அவர் பாஜக கட்சியில் இணையவில்லை என்றும் வரும் தேர்தலில் அந்த கட்சிக்கு கர்நாடகாவில் ஆதரவு அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

“பாஜக-வில் இணையவில்லை.‌ பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடி திறமையானவர். பசவராஜ் மேல் உள்ள நம்பிக்கையால் அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் கர்நாடக மாநிலம் சிறக்கும்.

எனவே பசவராஜ் பொம்மாய்காக பிரச்சாரம் செய்வேன்” என பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

இவர் கர்நாடக பாஜகவில் இணைந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆதரவு மட்டும் அளிப்பதாக பேசியது குறிப்பிடத்தக்கது.

கிச்சா சுதீப்

Kiccha Sudeep go to campaign for BJP

குழந்தை கடத்தல் பின்னணியில் உருவான ‘பிறர்தரவாரா’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

குழந்தை கடத்தல் பின்னணியில் உருவான ‘பிறர்தரவாரா’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ல் திரையரங்குகளில் வெளியான படம் ‘பிறர்தரவாரா’.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்றைப் பெற்றது.

இந்நிலையில் ஏ.ஆர்.காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள ‘பிறர் தர வாரா’ திரைப்படம் ஏப்ரல் 14, 2023 தமிழ் புத்தாண்டு முதல் மூவி வுட் (Movie Wood)) ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டேவிட் & கோகுல் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஹரிபிரசாத் படத்தொகுப்பில், ஜாக் வாரியர் இசையில் படம் நல்ல வரவேற்றை பெற்றது.

க்ரைம் த்ரில்லர் படமான பிரற்தர வாரா குறித்து நல்ல விமர்சனங்களை ஊடகங்களில் வெளிவந்தன.

மக்களின் அமோக பாராட்டைப் பெற்றதால் மக்களிடம் ஓடிடி வழியாக தற்போது கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

சிட்டிக்குள் நடக்கும் குழந்தை கடத்தலையும் அதன் பின்னால் இருக்கும் குற்றவாளிகளையும் எப்படி கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி காமராஜ் என்பதை சஸ்பென்ஸ்சோடு படமாக்கப்பட்டுள்ளது.

சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் அனைத்தும் குறிப்பிடும்படியாக உள்ளது. இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்ப்பதற்கு விறுவிறுப்போடு அடுத்து என்ன அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைப்பதோடு செண்டிமென்ட், வசனம் என்ற அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.

இந்த படம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட க்ரைம் திரில்லர் படம்.

பிறர்தரவாரா படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு,

Movie Wood ott release in april 14

சூர்யா 42 ஃப்ளாஷ் பேக் பகுதிக்கான சூட்டிங் எப்போது? தயாரிப்பாளரின் அப்டேட் இதோ

சூர்யா 42 ஃப்ளாஷ் பேக் பகுதிக்கான சூட்டிங் எப்போது? தயாரிப்பாளரின் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கிரீன் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்செயன், சூர்யா 42 பற்றிய முக்கிய அப்டேட்டை வெளியிட்டார்.

பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு 60 முதல் 80 நாட்கள் வரை நடைபெறும் என்று தனஞ்செயன் கூறினார்.

படத்திற்காக மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூர்யா 42 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரங்களின்படி, சூர்யா இந்த படத்தில் பல தோற்றங்களில் மற்றும் பல கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Latest exciting updates of ‘Suriya 42’ from production side

ரஜினியுடன் முதன் முறையாக இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்

ரஜினியுடன் முதன் முறையாக இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ரஜினியுடன் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்படும் என்றும், படக்குழுவினர் விரைவில் அங்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் , விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் படபிடிப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

National Award winning Tamil actor joins Superstar Rajinikanth for the first time

‘மஸ்காரா போட்டு மயக்குன பிரியன் இனி ஹீரோவாகி மயக்க வருகிறார்

‘மஸ்காரா போட்டு மயக்குன பிரியன் இனி ஹீரோவாகி மயக்க வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் பிரியன்.

இவர் ‘அரணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.

நாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை – பழனிவேல்
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம் – ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.

படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை…

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.

திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி. ” என்றார்.

Lyricist Priyan turns hero in Aranam

More Articles
Follows