Pushpa The Rise.; ரஷ்ய மொழி பேசும் ‘புஷ்பா’.; டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

Pushpa The Rise.; ரஷ்ய மொழி பேசும் ‘புஷ்பா’.; டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் வெளியாகி பட்டைய கிளப்பிய திரைப்படம் ‘புஷ்பா’.

பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உஊம்.. சொல்றியே மாமா…’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார்.

இந்த பாடலும் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் ரஷ்யன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ட்ரெய்லர் நாளை நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

ரஷ்ய நாட்டில் டிசம்பர் 8ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

மேலும் ரஷ்யாவில் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் ரஷ்ய மொழியில் இந்த படம் டிசம்பர் 1ல் திரையிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் பிரிமியர் காட்சியில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான விழா டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

புஷ்பா படத்துடன் சூப்பர் ஹிட் ஆன 6 இந்திய தபடங்களும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

Pushpa movie Russian language trailer & release updates

————-

#PushpaTheRise Russian language trailer tomorrow at 11.07 AM ?

Special premieres on Dec 1st at Moscow & Dec 3rd at St. Petersburg ?

#PushpaInRussia

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @MythriOfficial @4SeasonsCreati1

உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் இணைந்த சைமன் K கிங்

உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் இணைந்த சைமன் K கிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கொலைகாரன்’ & ‘கபடதாரி’ படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங், அமேசான் பிரைம் த்ரில்லர் தொடரான ​​” ‘வதந்தி-“க்காக மீண்டும் ‘கொலைகாரன்’ பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார்.

சைமன் K கிங் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் *வதந்தி* வலைத்தொடரின் பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக்கை பதிவு செய்தார்.

இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார்.

சைமன் K கிங்

வதந்தி, வலைத் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக் இயற்றியுள்ளார்.

இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கு கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர் குழு டைட்டில் ட்ராக்கை வழங்கியுள்ளது.

சைமன் K கிங்

உலகெங்கிலும் உள்ள பல குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் இதற்கு பங்களித்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் “பேப்பர் ராக்கெட்” எனும் தனது வெற்றிகரமான பணிக்குப் பிறகு, சைமன் K கிங் *வதந்தி* யில் தனது அற்புதமான இசையைப் பகிர்ந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கருதுகிறார்.

சைமன் K கிங்

Simon K King strings together over 100 musicians around the globe

ஒரே படத்தில் பிரபாசுடன் இணையும் விஜய் – தனுஷ் – சிம்பு பட ஹீரோயின்ஸ்

ஒரே படத்தில் பிரபாசுடன் இணையும் விஜய் – தனுஷ் – சிம்பு பட ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி 1 & 2’ ஆகிய படங்கள் மூலம் இந்தியளவில் பிரபலமானார் பிரபாஸ்.

ஆனால் அதன்பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘சாகோ’ & ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.

தற்போது இவரது கைவசம் ‘ஆதிபுருஷ்’ & ‘புராஜக்ட் கே’ & ‘சலார்’ ஆகிய படங்கள் உள்ளன.

இதனகயடுத்து மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் ஜோடியாக இணைகின்றனர்.

மாளவிகா மோகனன்

(விஜய்யின் ‘மாஸ்டர்’ & தனுஷின் ‘மாறன்’ அகிய படங்களில் மாளவிகாவும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நிதி அகர்வாலும் நாயகிகளாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில்
3வது நாயகியாக ரித்தி குமாரும் இணைகிறாராம்.

இவர் ஏற்கெனவே ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தாரா என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நிதி அகர்வால்

Prabhas Raja Deluxe movie will have 3 heroines

‘வாரிசு-களுடன் லண்டன் பறக்கும் நடிகர் விஜய்

‘வாரிசு-களுடன் லண்டன் பறக்கும் நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 23 அல்லது 24 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு விஜய் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட லண்டன் செல்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் லண்டன் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்..

‘வாரிசு’ படத்தில் சிம்பு பாடிய இரண்டாவது சிங்கிள் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Actor Vijay is going to London to celebrate Christmas

இதான் நடிகரின் லைஃப்.; காயங்களுடன் அருண்விஜய் உருக்கமான பதிவு

இதான் நடிகரின் லைஃப்.; காயங்களுடன் அருண்விஜய் உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் பல நடிகர்களுக்கு அது வொர்க் அவுட் ஆவதில்லை.

ஆனால் அஜித்துக்கு வில்லனாக நடித்து தற்போது வேகமாக முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் அருண் விஜய்.

இவர் தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியில் விபத்து ஏற்பட்டு தான் காயம் அடைந்துள்ளதாக புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற பல காயங்கள் எனக்கு ஏற்கனவே இருந்துள்ளன. ஆனாலும் டூப் இல்லாமல் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.

இதுதான் நடிகரின் வாழ்க்கை.. யாராலும் தடுக்க முடியாது என ஹேஷ் டேக் போட்டு பதிவிட்டுள்ளார்.

விஜய் இயக்கி வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார்.

ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகின்றது.

Behind all my hard-core actions you’ll see on screen there are plenty of bruises like these… But still love doing my own stunts..? Wait for the next on screen..??
Luv you all..❤️
#AchchamEnbadhuIllayae
#actorslife #nothingcanstop https://t.co/UqTcsOhuiS

Arun Vijay got injury at shooting spot

BABA Counting Starts: புதிய சீன்களுக்கு டப்பிங் பேசிய ரஜினி.; இசையை மெருகூட்ட ரஹ்மான் ஆர்வம்

BABA Counting Starts: புதிய சீன்களுக்கு டப்பிங் பேசிய ரஜினி.; இசையை மெருகூட்ட ரஹ்மான் ஆர்வம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு 2002 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’.

ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருந்தார்.

அண்ணாமலை – வீரா – பாட்ஷா ஆகிய ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு ‘பாபா’ படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

அந்த நாட்களில் இதுபோல ஒரு பரபரப்பை எவரும் கண்டதில்லை என்ற அளவிற்கு ‘பாபா’ பரபரப்பாக பேசப்பட்டது.

இதுதான் 2Kவில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ரஜினி படமாகும்.

‘பாபா’ படத்தை விரைவில் ரீ-ரீலீஸ் செய்ய உள்ளதாக வந்த தகவல்கள் தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த ஐடியாவை கொடுத்ததே ரஜினி தான் என சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

‘பாபா’ படத்தை தனது தியேட்டரில் அதிகாலை 4 மணி காட்சிக்கு திரையிட உள்ளதாக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுப்படங்கள் மட்டுமே அதிகாலை நள்ளிரவு 1 மணி காட்சி 4 மணி காட்சி என திரையிடப்படும்.

தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு பாபா ரிலீஸ் என்றாலும் அதற்கு அதிகாலை 4Am காட்சி என்பது திரையுலகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உலக சினிமா சரித்திரத்தில் ரீ-ரீலிஸில் முதல் சிறப்பு காட்சி திரைப்படம் எனலாம்.

மேலும் ‘பாபா’ படத்தின் உரிமை ரஜினியிடம் மட்டுமே உள்ளதால் பெரும்பாலும் எந்த YouTube தளத்திலும் இந்த படம் இல்லை.

எனவே பாபா படத்தின் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பு உருவாகும்.. இந்த படம் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஓரிரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர் , படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான ஹைப் மற்றும் ‘அற்புதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

BABA Counting Starts Rajini completed dubbing for new scenes

More Articles
Follows