தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா’ படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்ற அவர், இளையாராஜாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
national award winner devi sri prasad took blessings from ilayaraja