தேர்ந்த நடிகர் வெற்றி.; கேட்டதை கொடுத்தார் சுரேஷ் காமாட்சி. – ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

தேர்ந்த நடிகர் வெற்றி.; கேட்டதை கொடுத்தார் சுரேஷ் காமாட்சி. – ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ‘ஜீவி-2’.

கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்திலும் தொடர்ந்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்புடன் பாசிடிவான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பிரவீண் குமார் தனது அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

முதல் படத்தில் பணியாற்றும்போதே இந்த பரிசோதனை முயற்சி ஒர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகம் இருந்துச்சு. அதுல எதுனா புதுசா ட்ரை பண்ணலாம்னு பண்ணினோம். செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இடம்பெற்றுள்ன. அதையெல்லாம் 23 நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய சவால். நிறைய லொக்கேஷன், நிறைய இடம், நிறைய பயணம் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டது

ஸ்க்ரிப்ட்டை படித்தாலே பயங்கரமாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த விஷயங்களை இரண்டாம் பாகத்தில் கனெக்ட் செய்திருந்த விதம் ஆச்சர்யத்தை மூட்டியது.

முக்கோண விதி, தொடர்பியல் இவையெல்லாமே தேஜாவு கான்செப்ட் தானே.. இதுக்கு முன்னடி நமக்கு எப்போதோ நடந்த மாதிரி இருக்கேன்னு நினைப்போம் இல்லையா..?

ஒரு மறந்துபோன கனவுன்னு சொல்வாங்க இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.. அதில் பேண்டசி கலந்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜே கோபிநாத்.

ஜீவி எடுக்கும்போது இரண்டாம் பாகம் எடுப்போமா என நினைக்கவே இல்லை.. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு லீட் வைத்துதான் முடித்துள்ளோம்.

முதல் பாகம் பார்க்கும்போதெல்லாம் ஏதோ குறையிற மாதிரி இருக்குதோ, இந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் அப்படி பண்ணியிருக்கலாமோ அப்படின்னு ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும்.

அதை இந்த இரண்டாம் பாகத்தில் ஜஸ்டிபை பண்ணியிருக்கேன். இந்த இடைவெளியில் இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு வந்த அனுபவமும் இந்த இரண்டாம் பாகத்தில் கைகொடுத்தது.

இயக்குநர் V.J.கோபிநாத் நிறைய தகவல்கள் கொடுத்து உதவினார் என்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாங்கள் கேட்ட அனைத்தையும் வழங்கினார்.

வெற்றியுடன் முதல் பாகத்திலிருந்தே நல்ல பழக்கம். முதல் பாகத்தில் கூட அவருக்கு நிறைய டவுட் இருந்துச்சு.. இப்படி பண்ணலாமா..? இது சரியா வருமான்னு கேட்டுட்டே இருப்பார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு தேர்ந்த நடிகராகவே மாறிவிட்டார். சிகரெட் பிடித்தால் கூட அதன் கண்டினியுட்டியை சரியாக பாலோ பண்ணுவார்.

இந்தப்படம் திரையரங்குகளுக்கு வராமல் ஒடிடியில் வெளியானதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் தொடர்ந்து வரப்போகும் வாரங்களில் ரிலீஸுக்காக பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன..

இந்த சமயத்தில் நம் படம் தியேட்டர்களில் வெளியாகும்போது அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காமல் போனால், தயாரிப்பாளருக்கும் கஷ்டம்.. மொத்த உழைப்பும் வெளியே தெரியாமலேயே கூட போய்விடும் சாத்தியம் இருந்தது..

அதனால் இந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட்டது சரியான ஒன்று தான். ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் இருந்து குறைவில்லாத வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது. மேலும் படம் துவங்கி ஆறு மாதத்திற்குள் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டதே மிகப்பெரிய சந்தோசம் தான்” என்கிறார் பிரவீண் குமார்.

Jiivi 2 DOP talks about Hero and Producer

‘சைரன்’ வைத்த வண்டியில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் (வீடியோ)

‘சைரன்’ வைத்த வண்டியில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘அகிலன்’ ஆகிய படங்களை தொடர்ந்து எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

‘JR 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் நட்ராஜ், வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

கதாநாயகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் எழுத்தாளராக பணியாற்றியவர் ஆண்டனி பாக்கியராஜ்.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘SIREN’ சைரன் என தலைப்பு வைத்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது ஜெயம் ரவியின் 31 வது படமாகும்.

Here’s the motion poster of #JayamRavi, #KeerthySuresh starrer #Siren directed by debutant AB Antony Bhagyaraj.

This movie bankrolled by Home Movie Makers has music scored by #GVPrakash, cinematography by #SelvakumarSK and editing by #Ruben.

#JR31

Jayam Ravi and Keerthy Suresh movie titled Siren

டைரக்டர் கே எஸ் ரவிக்குமாரின் அடுத்த பட அறிவிப்பு போஸ்டர் வெளியானது

டைரக்டர் கே எஸ் ரவிக்குமாரின் அடுத்த பட அறிவிப்பு போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கமர்சியல் டைரக்டர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார் தான்.

இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். ரஜினியின் முத்து , படையப்பா கமல்ஹாசனின் அவ்வை சண்முகி தசாவதாரம், சரத்குமாரின் நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்திருந்தார் கே.எஸ் ரவிக்குமார். இதில் கதையின் நாயகனாகவும் இவர் நடித்திருந்தார்.

இவரின் உதவி இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.

இந்த நிலையில் இவரின் அடுத்த படத் தயாரிப்பு பற்றிய விவரத்தை விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 31) அன்று வெளியிட உள்ளதாக தன் RK CELLULOIDS நிறுவனம் சார்பாக போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

The poster of director KS Ravikumar’s next film has been released

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்க இதான் காரணமா?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்க இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆரின் இலட்சிய திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி பலரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் மணிரத்னம்.

இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் மணிரத்னம்.

அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலாக ‘பொன்னி நதி….’ இரண்டாவது பாடலான ‘சோழா சோழா…’ ஆகியவை வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

இந்த நிலையில் இதில் நடித்த சீனியர் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பிரபு, கார்த்தி ஆகியோரை விட ஜெயம் ரவிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏனென்றால் மற்ற நடிகர்களை விட ஜெயம் ரவி அதிக நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் அவரின் கேரக்டர் தான் ‘பொன்னியின் செல்வன்’ என்றும் கூறப்படுகிறது.

இது தயாரிப்பு நிறுவனத்துக்கே வெளிச்சம்.

ஜெயம் ரவி

Did Jayam Ravi get more salary in Ponniyin Selvan?

மியா ஜார்ஜை பார்த்த போது பயம் வந்துட்டு.. ‘கோப்ரா’ ரிலீசுக்கு ரீசன் சொன்ன விக்ரம்

மியா ஜார்ஜை பார்த்த போது பயம் வந்துட்டு.. ‘கோப்ரா’ ரிலீசுக்கு ரீசன் சொன்ன விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், ‘கோப்ரா’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது.

இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் சந்திப்பதற்காக ஹைதராபாத் நேற்று வந்தடைந்தனர்.

சீயான் விக்ரம் தலைமையிலான ‘கோப்ரா’ குழுவினருக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோப்ரா

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி. திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் என் வி திருப்பதி பிரசாத் பேசுகையில்…

‘கோப்ரா திரைப்படம் கொரோனா தொற்று காலகட்டத்தில் ரஷ்ய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷ்யாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும்.

இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராக திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். புஷ்பா இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் கோப்ரா படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கொல்கத்தா, அலிப்பி, சென்னை, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

விக்ரமின் கலை உலக பயணத்தில் இந்த கோப்ரா மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.

கோப்ரா

சீயான் விக்ரம் பேசுகையில்…

‘கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்து தான் நடித்தேன்.

எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.

கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.

மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

கோப்ரா

இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.

நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

கோப்ரா

நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.

என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது.

தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது.

‘கோப்ரா’ திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

‘கோப்ரா’ போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என ஆவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.” என்றார்.

கோப்ரா

ஊடக சந்திப்பில் நடைபெற்ற சுவாரசியமான விசயங்கள்…

• இந்த ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பலமுறை தலையில் குட்டி, ‘உனக்கு கணக்கு வராதுடா…’ என தெரிவித்தார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் கணிதாசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும். இயக்குனர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில் தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட கட்சி வரை கதை சுவாரசியமாக பயணிக்கும்.

• கோப்ரா என்றால் எப்போது தாக்கும் என்று தெரியாது. கோப்ரா ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

• படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.

கோப்ரா

Vikram shared his working experience with Mia George in Cobra

க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்து குமார்.

சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், “அடி போலி…” என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய சித்து குமார் அப்பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி வானவில்’, விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 13, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம், அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் சித்து குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு (HR) அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட சித்து குமார் – ராஜி திருமணம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

சித்து குமார்

Music Director Siddhu Kumar to get married on september 9

More Articles
Follows