எனக்கு ஏழரை சனி.. ஊரைவிட்டு கிளம்ப சொன்னாரு – ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி

எனக்கு ஏழரை சனி.. ஊரைவிட்டு கிளம்ப சொன்னாரு – ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் நடித்துள்ள படம் ‘குலசாமி’. இந்த படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விழாவில் ‘மாநாடு’ பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது

“நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயது முதலே நண்பர்கள் தான்..

ஒருமுறை ஜோசியரை பார்த்தேன். எனக்கு ஏழரை சனி நடப்பதாகவும் கடல் தாண்டி வெளிநாடு சென்றால் ஏழரை சனி பாதிப்பு இருக்காது என்றார்.

மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவே கடல் தாண்டி வெளிநாடு சென்றேன். ஏழரை சனி ஒன்றும் செய்யவில்லை.

மலேசியாவில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன்.. அதன் பின்னர்தான் இங்கு திரும்பினேன். அப்போது பிரேம் பாண்டியன் என்ற தன் பெயரை சரவண சக்தி என்று மாற்றி ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் என் நண்பன்.

நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

குலசாமி

Suresh Kamatchi speech at kulasami press meet

விஜய்சேதுபதியால் தான் ‘குலசாமி’ கவனிக்கப்படுகிறார் – சரவண சக்தி

விஜய்சேதுபதியால் தான் ‘குலசாமி’ கவனிக்கப்படுகிறார் – சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MIK Productions Private Limited தயாரிப்பில் விமல் & தான்யா ஹோப் நடிப்பில் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள படம் ‘குலசாமி’.

நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது…*

இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி.

அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார்.

சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள் இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார்.

அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது.

இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

‘Kulasamy’ is noticed because of Vijay Sethupathi says Saravana Shakthi

போர் தொழிலில் இறங்கும் சரத்குமார் – அசோக் செல்வன் – நிகிலா விமல்

போர் தொழிலில் இறங்கும் சரத்குமார் – அசோக் செல்வன் – நிகிலா விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கின்றனர்.

இந்நிறுவனம் இதற்கு முன் ‘ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்), இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது.

மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

Ashok Selvan and Sarath Kumar joins for a new film Por Thozhil

நடிகர் சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு உதவிய உலக நாயகன் கமல் ஹாசன்

நடிகர் சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு உதவிய உலக நாயகன் கமல் ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ புகழ் இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் சித்தார்த் கைகோர்த்து வரும் படம் ‘சித்தா’.

ஏடாகி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன், நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சித்தார்த்தும் பைக்கில் செல்லும் சிறுமியும் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

சித்தா ஒரு மனதைக் கவரும் கிராமப்புற குடும்ப முயற்சியாகத் தெரிகிறது.

நடிகர்களின் மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Kamal Haasan unleashes the first look poster of Siddharth’s next film!

JUST IN PS1 விழாவுக்கு ரஜினி – கமல் வந்தாங்க.; விமல் வர மாட்டாரா.? அமீர் ஆவேசம்

JUST IN PS1 விழாவுக்கு ரஜினி – கமல் வந்தாங்க.; விமல் வர மாட்டாரா.? அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் குணச்சித்திர நடிகர் என பெயர் பெற்றவர் சரவணசக்தி. இவர் தனது சினிமா பயணத்தை இயக்குனராக தொடங்கினாலும் நடிகராக பிரபலம் அடைந்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ள படம் ‘குலசாமி’.

இதில் விமல் மற்றும் தன்யா ஹோப் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் அவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமீர்

இந்த விழாவில் இறுதியாக அமீர் பேசும்போது..

“உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நான் சரவணன் சக்தி இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்து வருகின்றோம்.

இந்த படத்தின் சூட்டிங் மிகவும் கலகலப்பாக சென்றது. சரவணன் சக்தி ஒரு சிறந்த கதை சொல்லி ஆவார்

அவர் இயக்கியுள்ள இந்த ‘குலசாமி’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படத்தின் விழாவிற்கு நாயகன் விமல் மற்றும் நாயகி வந்திருக்க வேண்டும்.

அவர்கள் மற்ற காரணங்களை தவிர்த்து கண்டிப்பாக இந்த படத்தில் விழாவிற்கு வந்திருக்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முதல் கோடிகளை குவிக்கும் பல நடிகர்கள் இருந்தும் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி & பத்மஸ்ரீ கமல் ஆகியோர் வந்திருந்தனர்.

ஒரு பிரம்மாண்ட படத்திற்கே ப்ரமோஷனுக்கு இருவரும் வந்திருந்தனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற படங்களுக்கு விமல் போன்ற நாயகர்கள் வராதது கண்டிக்கத்தக்கது. அவர்கள் தயாரிப்பாளர்களின் வலியை புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார் அமீர்.

அமீர்

Rajini Kamal coming for Promotion Why Not Vimal Says Ameer

கமலுடன் இணைந்ததைப் போல ரஜினியுடன் இணைவீர்களா? FILMISTREET கேள்விக்கு மணிரத்னம் பதில்.?!

கமலுடன் இணைந்ததைப் போல ரஜினியுடன் இணைவீர்களா? FILMISTREET கேள்விக்கு மணிரத்னம் பதில்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எனவே படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பொன்னியின் செல்வன் 2

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மணிரத்னம் மற்றும் படக்குழுவினர் பதில் அளித்தனர்.

அப்போது FILMISTREET சார்பாக கேள்வி கேட்கும் போது..

“பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் அவரை நீங்கள் நடிக்க வைக்கவில்லை.. வேண்டாம் என மறுத்து விட்டீர்கள்.

தற்போது கமலுடன் இணைந்து பணியாற்ற உள்ளீர்கள்.. அதுபோல ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? பொன்னியின் செல்வன் பாகம் 3 வந்தால் ரஜினியை இயக்குவீர்களா? என கேட்டனர்.

ரஜினி கால்ஷீட் உங்களிடம் இருக்கிறதா.? என எதிர் கேள்வி கேட்டார் மணிரத்னம்.

மேலும் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்தது என்னுடைய பாக்கியம் என தெரிவித்தார் மணிரத்னம்.

கமல் நடித்த நாயகன் மற்றும் ரஜினி நடித்த தளபதி ஆகிய படங்களை இயக்கியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் 2

Will you join  with Rajini like you joined  with Kamal? Mani Ratnam’s answer to FILMISTREET’s question.?!

More Articles
Follows