தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.
இந்தியா தவிர அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
வருகிற மே 4ஆம் தேதி சீனா நாட்டில் பாகுபலியை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அந்த படத்தை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெரப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இன்னொரு முக்கிய வேடத்திற்காக எவலின் ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.
ரூ. 200 கோடியில் உருவாகி வரும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ‘சாஹோ’ படத்தின் ஹிந்தி உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 120 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ்க்கு இந்தியா முழுவதும் தற்போது மார்கெட் ஏற்பட்டுள்ளதால் 500 கோடிக்கும் மேல் ‘சாஹோ’ வசூலிக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
Prabhas Saaho Latest News and Hindi remake rights