நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை படைக்கும் ‘சாஹோ’

நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை படைக்கும் ‘சாஹோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்த கபூர், அருண்விஜய் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியான படம் ‘சாஹோ’.
இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் எங்கும் வெளியானது.

படம் வெளியான நாள்முதல் தமிழகத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் தமிழகத்தில் வசூல் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படம் இதுவரை உலகளவில் 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தியில் மட்டுமே 100 கோடியைக் கடந்துள்ளதாம்.

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் வசூல் மழை பொழியுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

DTMK – இதுதான் ரஜினி கட்சியின் பெயரா..? காவலர்கள் குழப்பம்

DTMK – இதுதான் ரஜினி கட்சியின் பெயரா..? காவலர்கள் குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகடந்த 25 வருடங்களாக தமிழகமே எதிர்பார்த்த விடை… ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா..? என்பதுதான்..

ரஜினிகாந்த் சொன்னாரோ இல்லையோ.? இதனை கிண்டல் செய்தே பலரும் தங்கள் அரசியல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இதனிடையில் கடந்த 2017 டிசம்பர் 31ல் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். வருகிற சட்டமன்ற தேர்தலே தன்னுடைய இலக்கு என்றார்.

இதன் பொருள் அறியாத பலர் இன்னும் கட்சி ஆரம்பிக்க இல்லை என்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் தேசிய தமிழர் முன்னேற்றக் கழகம்.. (TTMK / DTMK) என்பது தான் ரஜினி கட்சியின் பெயர் என்ற தகவல் இணையத்தில் வருகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் என்ற காவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் இதே பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் 2 வருடங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajisha Vijayan to star opposite Dhanush in Karnan movie‛பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.

இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.

கர்ணன் என்ற பழைய படத்தலைப்பை இப்படத்திற்கு வைக்கவுள்ளனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் என்பவர் இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

சைக்கிள் வீராங்கனையாக ரஜிஷா நடித்துள்ள பைனல்ஸ் என்ற படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இவர் தன் முதல் மலையாள படத்திலேயே கேரள மாநில விருதை பெற்றவர்.

தனுஷின் சமீபத்திய படங்களில் கீர்த்தி சுரேஷ், மடோனா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajisha Vijayan to star opposite Dhanush in Karnan movie

இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி

இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Only online No more counter tickets says TN minister Kadambur Rajuகடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் நிலவும் பல குளறுபடிகளை களைய திரைத்துறை சங்கங்கள் முயன்று வருகின்றன.

இதற்காக பல ஆலோசனை கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தியேட்டரில் டிக்கெட் எடுப்பதில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முடியாது நிலையை உருவாக்கியுள்ளது.
அதாவது இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டுமாம்.

இதனால் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகமான விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியாது.

மேலும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மட்டுமின்றி விலையையும் அரசு சார்பில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு சேவை கட்டணம் ரூ. 30 இதுவரை உள்ளது. அந்த கட்டணம் குறைக்கப்படுமா? எனத் தெரியவில்லை.

Only online No more counter tickets says TN minister Kadambur Raju

சாஹோ-வுக்கு பயந்தது வேஸ்ட்டா போச்சே.; காப்பான் மைண்ட் வாய்ஸ்

சாஹோ-வுக்கு பயந்தது வேஸ்ட்டா போச்சே.; காப்பான் மைண்ட் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaappan reaction towards Saaho movie negative reviews கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரூ. 350 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் சாஹோ படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் காப்பான் ரிலீசை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் சாஹோ படம் மோசமான விமர்சனங்களை தமிழகத்தில் சந்தித்து வருகிறது.

சாஹோ படத்திற்கு பயந்து காப்பானை தள்ளி வைத்தது வீணாகிவிட்டதே என காப்பானின் மைண்ட் வாய்ஸ் கோலிவுட்டில் கேட்கிறதாம்.

ஆனாலும் சாஹோ படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ. 300 கோடியை வசூலை எட்டியுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kaappan reaction towards Saaho movie negative reviews

2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2pointO making records in Reservation in Chinaலைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் ‘2.0’.

ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்தாண்டு உலகமெங்கும் வெளியாகி ரூ. 700 கோடியை வசூலித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 6ம் தேதி சீனா நாட்டில் மட்டும் 56000 திரைகளில் (47000 தியேட்டர்களில்) வெளியாக உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது.

இதுவரையில் நடந்துள்ள முன்பதிவில் மட்டும் ரூ 1 கோடியை வசூலித்துள்ளதாம்.

ஒரு படத்தின் முன்பதிவிற்கே இந்த வசூல் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே நிகழும்….

சீனாவிலும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது இந்திய சினிமாவிற்கே பெருமைதானே..

Rajinis 2pointO making records in Reservation in China

More Articles
Follows