சாஹோ சாகடித்தாலும் மீண்டும் அதே டீமுடன் இணையும் பிரபாஸ்

சாஹோ சாகடித்தாலும் மீண்டும் அதே டீமுடன் இணையும் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saaho Prabhasபாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

அதன் பின்னர் அவர் சுஜீத் இயக்கத்தில் நடித்த படம் தான் சாஹோ.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரான இப்படத்தை ரூ.320 கோடியில் யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

தெலுங்கில் ஓரளவு லாபத்தை கொடுத்தாலும் மற்ற மொழிகளில் படு தோல்வியை தழுவியது.

தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இதனையடுத்து மீண்டும் சாஹோ படக்குழுவுடன் இணையவிருக்கிறாராம்.

அதே இயக்குனர் சுஜீத் இயக்க, சாஹோவை தயாரித்த யுவி கிரியேசனே நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.

கல்யாணமும் கத்திரிகாயும் இல்ல..; அப்புறம் சொல்றேன்.. யோகிபாபு

கல்யாணமும் கத்திரிகாயும் இல்ல..; அப்புறம் சொல்றேன்.. யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu marriageசூப்பர் ஸ்டார் படம் முதல் சின்ன நட்சத்திரங்கள் படம் வரை யோகிபாபு இல்லாத படங்களே இல்லை எனலாம்.

அவ்வளவு பிஸியாக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தில் திறமைக்கு தான் எல்லாமே. இல்லாட்டி எனக்கு இப்படி அழகான மனைவி கிடைச்சு இருக்குமா. அதனால திறமையை மனைவி வழங்குகிற உங்களை எல்லாம் தானே தேடிவரும். இது என்னுடைய அட்வைஸ். கேட்டா கேளுங்க, நல்லா இல்லாட்டி விட்ருங்க, என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுவின் வருங்காலை மனைவி இவர்தான் என நினைத்து அதிகளவில் பகிர்ந்தனர்.

தற்போது அது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். என யோகிபாபு பதிவிட்டுள்ளார்.

விஜய்க்கு சிலை.; கன்னியாகுமரியில் களைகட்டும் அருங்காட்சியம்

விஜய்க்கு சிலை.; கன்னியாகுமரியில் களைகட்டும் அருங்காட்சியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay wax statue in kanyakumariதமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் மாயாபுரி என்ற மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது.

இதில் இந்தியாவில் மிக பிரபலமானவர்களுக்கு மெழுகுச்சிலை நிறுவப்பட்டு வருகிறது.

அதன்படி அன்னை தெரசா, மன்மோகன்சிங், அப்துல் கலாம், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மோகன்லால் உள்ளிட்டவர்களுக்னு மெழுகுச்சிலைகள் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய்யின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி ரசிகர்களும், பொதுமக்களும் அந்த சிலையுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

ஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்

ஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in heroமித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தை இன்னும் பிரபலபடுத்த பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை ஹீரோ படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இப்படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஹீரோ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது என்பதை பார்த்தோம்.

ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டதையும் பதிவிட்டோம்.

இந்த நிலையில் பிரச்சினைகள் மேலும் தொடர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

தற்போது டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே டிசம்பர் 20-ந்தேதி ஹீரோ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் பாட்ஷா.. ரஜினி ரசிகர்களுக்கு சத்யா மூவிஸ் விருந்து

மீண்டும் பாட்ஷா.. ரஜினி ரசிகர்களுக்கு சத்யா மூவிஸ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baasha movieசூப்பர் ஸ்டார் ரஜினி கேரியரில் அவராலேயே மறக்க முடியாத படம் பாட்ஷா.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம். வீரப்பன் தயாரித்திருந்தார்.

தேவா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் பல ஆட்டோ ஸ்டாண்டுகளில் பட்டைய கிளப்பும்.

ஓரிரு வருடங்களுக்கு முன் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 12 ந் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதாலும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக சத்யா மூவிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் & வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க, வெங்கட்பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “லாக்கப்”.

இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் காலா பட புகழ் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

சில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
கலை – ஆனந்த் மணி
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records

More Articles
Follows