வாரிசை தொடர்ந்து வரிசை கட்டும் ஷாம் படங்கள்.; பவர்ஸ்டாருடன் கூட்டணி

வாரிசை தொடர்ந்து வரிசை கட்டும் ஷாம் படங்கள்.; பவர்ஸ்டாருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.

அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.

இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த ‘வாரிசு’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷாம். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்தததாக தமிழில் இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ஷாம்.

இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இன்னொரு பக்கம் தெலுங்கில் ‘சாஹோ’ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாம்.

அந்தவிதமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகராக படங்களில் நடித்து வருகிறார் ஷாம்.

Actor Shaam join hands with Pawan Kalyan

கொச்சியில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் குழந்தை பற்றிய ‘குற்றச்சாட்டு’

கொச்சியில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் குழந்தை பற்றிய ‘குற்றச்சாட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ‘குற்றச்சாட்டு’ படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார்.

மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் விமல் விஷ்ணு கூறும்போது…

“கொச்சியில் பல தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’.

அவர்களின் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு, குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் போது, அப்பாவி தந்தை தனது மகளுக்கு நீதி கேட்க முயற்சி செய்கிறார். படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இதுவரை படத்தைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் தருணங்களின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன” என்றார்.

சுரேஷ் நந்தன் இசையமைக்க, நிதின் சேகர் ஆர்.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் (எடிட்டர்), எஃபெக்ட்ஸ் & லாஜிக்ஸ் (விஎஃப்எக்ஸ்), ஐஜீன் (டிஐ), சிவா (கலரிஸ்ட்), சூப்பர் குட் ஸ்டுடியோஸ் (டப்பிங்), ஏஎஸ் லட்சுமி நாராயணன் (மிக்சிங் மற்றும் மாஸ்டரிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவினர்.

டிவைன் பிளாக்பஸ்டர் சார்பில் ராஜேஷ் மாதவன், சஜனி ராஜேஷ், தயன் ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி ஆகியவை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Kutrachaattu True incident happened at Cochin

விஜய்சேதுபதி தொடங்கி வைத்த மணிகண்டன் பட சூட்டிங் அப்டேட்

விஜய்சேதுபதி தொடங்கி வைத்த மணிகண்டன் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.

இவர்களுடன் கண்ணா ரவி, ‘பருத்திவீரன்’ சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

மணிகண்டன்

கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த திரைப்படத்ததை ‘குட் நைட்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நஸ்ரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

விஜய்சேதுபதி தொடங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.

மணிகண்டன்

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு அருகே உள்ள கோகர்ணா எனும் இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

அங்கு நடைபெறும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து படக்குழுவினர் அதனை பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

மணிகண்டன்

Manikandan and Gowri Priya starrer project updates

ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு…’ பாடகர் அரசியலில் குதித்தார்

ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு…’ பாடகர் அரசியலில் குதித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர் ஆர் ஆர்’.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை எம்.எம் கீரவாணி வென்றார்.

ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச்.

ராகுல் சிப்லிகஞ்ச் தற்போது தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

nattu nattu sang singer Rahul Sipligunj MLA candidacy Filing

அட்லியின் ‘ஜவான்’ படத்தில் ஷாருக் எடுத்த அவதாரங்கள்.; ஷாக்கான ரசிகர்கள்

அட்லியின் ‘ஜவான்’ படத்தில் ஷாருக் எடுத்த அவதாரங்கள்.; ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஜவான்” ப்ரிவ்யூ வெளியானதிலிருந்தே, ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது ப்ரிவ்யூவில் இடம்பெற்ற முக்கிய அம்சம் நடிகர் ஷாருக்கானின் பலவிதமான தோற்றங்கள் தான்.

‘ஜவான்’ படத்திலிருந்து, நடிகர் SRK-ன் அனைத்து அவதாரங்களையும் ஒரே சட்டகத்தில் கொண்டு வந்து, ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் படத்தில் ஷாருக்கின் ஐந்து வெவ்வேறு தோற்றங்களையும் அற்புதமாக காட்டுகிறது.

இந்த மாறுபட்ட அவதாரங்களுக்கு, SRK சிரமமின்றி மாறுவது அவரது குறிப்பிடத்தக்க பன்முகத் திறனுக்கு ஒரு பெரும் சான்றாகும்.

“ஜவான்” சந்தேகத்திற்கு இடமின்றி நாம் பார்த்திராத SRK ன் பல வித்தியாசமான அவதாரங்களை, பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.

கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Shah Rukh Khan unveils a multi faceted poster of Jawan

இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா’ படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டது.

அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்ற அவர், இளையாராஜாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

national award winner devi sri prasad took blessings from ilayaraja

More Articles
Follows