உடற்பயிற்சி நிபுணருக்கு ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்த பிரபாஸ்

உடற்பயிற்சி நிபுணருக்கு ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்த பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தில் பாகுபலியாக நடித்தவர் பிரபாஸ்.

அந்த படத்தை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற பிரம்மாண்ட படத்திலும் நடித்தார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட படைப்பாகவே மாறியுள்ளது.

‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கவுள்ள ஒரு படம் ஆகியவையும் பிரம்மாண்ட படைப்புகளே.

இவை அனைத்தும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளன.

நடிகர் பிரபாஸுக்கு கடந்த 10 வருடங்களுக்காக உடற்பயிற்சி நிபுணராக இருப்பவர் லட்சுமண் ரெட்டி.

இந்த நிலையில் லட்சுமண் ரெட்டிக்கு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரைப் பரிசாக அளித்திருக்கிறாராம் பிரபாஸ்.

இந்த படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

PRABHAS

Actor prabhas gifted range rover to his trainer

ட்ரெண்ட் லவுட்டின் முதல் படம்..; உஷா உதுப்பின் பேத்தியாகிறார் கமல் மகள் அக்‌ஷரா

ட்ரெண்ட் லவுட்டின் முதல் படம்..; உஷா உதுப்பின் பேத்தியாகிறார் கமல் மகள் அக்‌ஷரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshara haasanட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

தற்போது அடுத்த ஆச்சர்யமாக, Trend Loud நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது…

இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும்.

மேலும் 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே.

அவர் இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது.

ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அவரது அன்பான இயல்பு, அவரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது.

அவர் முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இறுதியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு.

Veteran singer Usha uthup plays crucial role in Aksharas next

KT குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’..; ஹீரோ & டைரக்டர் யார்..?

KT குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’..; ஹீரோ & டைரக்டர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gentle man 2கதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன்.

வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம்.

நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. படத்தின் வியாபாரத்தை தாண்டி பல மடங்கு செலவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தினார்.

ஒரு சிறிய காதல் கதையான “காதல்தேசம்” படத்தை பிரமாண்டப்படுத்தி ரசிகர்களிடம் ஹீரோவாக உயர்ந்து நின்றார். ” காதலன் ” படத்தின் மூலமாக பிரபு தேவாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அவர் தன்னுடைய பிரமாண்ட தயாரிப்பான , ‘ரட்சகன்’ மூலம் தமிழ் திரை உலகிற்கு தெலுகு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவை அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் மிஸ் யூனிவர்ஸ் சூஷ்மித்தாசென்யை வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்தார்.. மேலும் பல நடிகர் நடிகைகள் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப் படுத்தினார். இப்பொழுது அதே பிரமாண்டத்துடன் மீண்டும் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய படமான “ஜென்டில்மேன் ” படத்தின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக தயாரிக்கிறார். ஜென்டில்மேன்2 மூலம் மீண்டும் தயாரிப்பு வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்கிற அவர்
மேலும் கூறும்போது..

ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட்டமாக வரவேற்றார்கள்.
ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டம் ஜென்டில்மேன்-2 வில் காணலாம்.

நவீன தொழில் நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்படும். நடிகர், நடிகை மற்றும், தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஜென்டில்மேன்-2 பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளி வரும். இந்த திரைப்படம் முதலில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான பிறகு தான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பலரை வைத்து பல மலையாள படங்களை தயாரித்த இவர் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களை தமிழகம் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் வெளியிட்டார்.

எந்த படத்தை வெளியிட்டாலும் பிரமாண்டமாக செலவு செய்து பப்ளிசிட்டி செய்வதால்.. கே.டி.குஞ்சுமோன் வெளியீடு ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான்.

Gentleman Producer KT Kunjumon announces sequel

நடிகை கங்கனாவின் செயலை பகத் சிங்குடன் கம்பேர் செய்த விஷால்

நடிகை கங்கனாவின் செயலை பகத் சிங்குடன் கம்பேர் செய்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.

இவர்தான் விஜய் இயக்கும் தலைவி படத்தை ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கங்கனாவின் பேச்சை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இனி கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த கங்கனா ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்கள்’ என சவால் விடுத்தார்.

இதனையடுத்து நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மோதலை தொடர்ந்து கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்து பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இதனிடையில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணாவின் வீடு ஆபிஸ் கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. (இந்த செய்தியை நம் தளத்தில் நேற்று பார்த்தோம்.)

மேலும் கங்கணாவும் பலத்து பாதுகாப்புடன் மும்பை வந்தார்.

இத்துடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டி வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில், கங்கணாவுக்கு ஆதரவு தமிழ் திரையுலகில் இருந்து ஆதரவு குரல் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

“அன்பார்ந்த கங்கணா,

உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருக்கிறீர்கள்.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது உங்களின் காரியம்.

பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”.

இவ்வாறு நடிகர் விஷால் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Vishal compares Kangana ranaut to Bhagat Singh

அசோக் செல்வன் & மேகா ஆகாஷ் ஜோடியை இணைக்கும் இயக்குநர் ஸ்வாதினி

அசோக் செல்வன் & மேகா ஆகாஷ் ஜோடியை இணைக்கும் இயக்குநர் ஸ்வாதினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

megha akashதமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா ஆகாஷ் இளமை பொங்கும் திறமையுடன் தரமான படங்களை தந்து வரும் அசோக் செல்வனின் அடுத்த காமெடி, டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J. செல்வகுமார் இது குறித்து கூறியதாவது…

மிகவும் திறமை வாய்ந்த, இளம் நடிகையான மேகா ஆகாஷ் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரம் கதைப்படி, நவநாகரீக ஸ்டைல் லுக்கில் இருக்கும் அதே நேரம், குடும்பபாங்கான தோற்றமும் கொண்டிருக்க வேண்டும்.

இயக்குநர் ஸ்வாதினி நடிகை மேகா ஆகாஷை பரிந்துரைத்தபோது, அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் என அனைவக்கும் தோன்றியது. திரைக்கதையை பலமுறை படித்தவன் என்கிற முறையில் மேகா ஆகாஷ் இக்கதாப்பாத்திரதிற்கு கச்சிதமாக உயிர் தருவார் மேலும் அவர் அசோக் செல்வனுக்கு மிகச்சரியான, பொருத்தமான ஜோடியாக இப்படத்தில் மிளிர்வார் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. அவருடன் இணைந்து பணியாற்றும் மிகச்சிறந்த நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறியபோது…

அரசாங்கம் கொரோனாவுக்கு எதிரான பாதுக்காப்புடன், படப்பிடிப்பை துவங்குவதற்கான, தளர்வுகளை அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஒரு சினிமா தயாரிப்பாளராக, எங்களது தற்போதைய தேவையை நிறைவேற்றியதற்கு அரசாங்கத்திற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். நாங்கள் இப்படத்தின் படப்பிடிப்பை, அரசு கூறியுள்ள அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கடைப்பிடித்து, வரும் அக்டோபரில் துவங்கவுள்ளோம். அனைவரையும் கவரும் குடும்ப, காமெடி, டிராமாவான இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகை மேகா ஆகாஷ் கூறியதாவது…

மிகத்தரமான, நேர்த்தியான திரைக்கதை கொண்ட படத்தில், அதிலும் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது என்பது எந்த ஒரு ஹீரோயினுக்கும் வரமே!. அவ்வளவு எளிதில் இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைத்திராது.

இயக்குநர் ஸ்வாதினி படத்தின் திரைக்கதையை கூறியபோது கதாப்பாத்திரத்தின் ஆத்மாவுக்குள் கரைந்து போனேன். இப்படத்தில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சி. அடுத்த மாதம் நடக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Actor Ashok selvan to romance Megha Akash

BREAKING காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

BREAKING காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகர் #வடிவேல்பாலாஜி காலமானார். அவருக்கு வயது 44.

இவர் விஜய் டிவி & சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி பில்ரோத் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்.

Actor Vadivel Balaji passed away

More Articles
Follows