பாலைவனத்தில் 37 கார்கள்-5 ட்ரக்குகளை அடித்து நொறுக்கிய பிரபாஸ்

பாலைவனத்தில் 37 கார்கள்-5 ட்ரக்குகளை அடித்து நொறுக்கிய பிரபாஸ்

Prabhas next movie Saaho scheduled in Abu Dhabiபாகுபலி படத்திற்கு பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படங்களுக்கு உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவர் தற்போது நடித்து வரும் படம் “சாஹூ”. அப்படம் பற்றிய விவரம் வருமாறு…

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் “சாஹூ”.

ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் “சாஹூ” படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது.

அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்துவருகிறார்.

பிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது “சாஹூ”.

Prabhas next movie Saaho scheduled in Abu Dhabi

வட சென்னை ட்ரைலரை தன் பிறந்த நாளில் வெளியிடுகிறார் தனுஷ்

வட சென்னை ட்ரைலரை தன் பிறந்த நாளில் வெளியிடுகிறார் தனுஷ்

VadaChennai movie trailer will be released on Dhanush Birthdayவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’.

மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அன்றுதான் தனுஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இது தவிர இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

VadaChennai movie trailer will be released on Dhanush Birthday

எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் !!

எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் !!

SRS production‘எஸ் ஆர் எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா’ என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தொடங்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிறுவனத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இளைஞர் எஸ்ஆர்எஸ் சபரீஷ் இந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஏற்கெனவே குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்ற நிறுவனம் இது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்துக்கு ‘மனிதி’ என்ற புரமோஷனல் பாடலை உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இது தவிர ஜெயாஸ் ஸ்பைசிஸ், மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கான விளம்பரப் படம் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

இப்போது ‘தாய் எங்கள் தமிழ்நாடே’ என்ற இசை வீடியோ – படத்தை உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம். நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள எஸ்ஆர்எஸ் சபரீஷ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழகத்தின் இயற்கை அழகு, கலை, கலாச்சாரத்தை முழுவதுமாகக் காட்டும் ஒரு முயற்சி இது. இந்த புரொஜக்ட் முழுமையடைய 5 ஆண்டுகள் ஆகும்.

‘எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியாவின்’ அடுத்து வெப் சீரிஸ் தயாரிப்பிலும், தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.

2017-ம் ஆண்டுக்கான சிறந்த விளம்பரப் பட ஐடியாவுக்கான விருதினைப் பெற்றவர் சபரீஷ். வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ். இதற்கென சகல வசதிகளும் கொண்ட புதிய அலுவலகம் சென்னை முகப்பேரில் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் விதார்த், மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

வருங்கால மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்

வருங்கால மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்

nayanthara and vignesh shivanஅஜித்துடன் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இவையில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் உள்ள 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திலிருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

அஜித்-விஜய்-சிம்பு உடன் நடித்தவர் யகன் பட ஹீரோவாகிறார்

அஜித்-விஜய்-சிம்பு உடன் நடித்தவர் யகன் பட ஹீரோவாகிறார்

yakanவெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்தவர் மஹத்.

இதன் பின்னர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தம்பியாகவும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் நண்பராகவும் நடித்தார்.

தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு ‘யகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தினேஷ் பார்த்தசாரதி இயக்கும் இப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு பேரன் ஆனார் ஜுங்கா விஜய்சேதுபதி; எப்படி தெரியுமா..?

ரஜினிக்கு பேரன் ஆனார் ஜுங்கா விஜய்சேதுபதி; எப்படி தெரியுமா..?

junga vijay sethupathiவிஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள படம் ஜுங்கா.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அப்போது ஜுங்கா என்றால் என்ன? என்ற கேள்விக்கு படத்தின் நாயகன் பதிலளித்தார்.

ஜுங்கா என்பது என் பெயர். அவ்வளவுதான். படத்தில் என் என் தாத்தா பெயர் லிங்கா. அப்பா பெயர் ரங்கா.

இதுதொடர்பான ஒரு சுவாரஸ்ய காட்சி படத்தில் உள்ளது. அதை இப்போது சொல்ல மாட்டேன்.” என தெரிவித்தார்.

லிங்கா (2014 ஆண்டு) மற்றும் ரங்கா (1982 ஆண்டு) ஆகிய இரண்டு படங்களுமே ரஜினிகாந்த் நடித்த படத்தலைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows