கமலின் பிக்பாஸ் வீட்டில் ரஜினி ஓவியத்தை அகற்றியதால் சர்ச்சை

Petta New Posterகமல் நடத்தி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை இந்த வீட்டில் அனுமதித்தனர். அப்போது ‘பிக் பாஸ் 3′ வீட்டில் ‘பேட்ட’ ரஜினிகாந்த் ஓவியம் இருந்தது.

ஆனால் நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரஜினி ஓவியம் இடம் பெறவில்லை.

இதற்கு ரஜினி ரசிகர்கள் அதற்கு அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘பேட்ட’ படத்தில் ரஜினி புகைபிடித்தபடி இருந்த ஓவியம் ஒன்றுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டதாகவும் அந்த புகைப்பிடிக்கும் ஓவியத்தை வைக்க எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘பேட்ட’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெறவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் ஒருவேளை கமல் நீக்க சொல்லியிருப்பாரோ? எனவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Overall Rating : Not available

Related News

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள்…
...Read More

Latest Post