பொங்கல் தினத்தில் ரஜினியுடன் மோத மல்லுக்கட்டும் அஜித்

Petta and Viswasam movies clash on Pongal news updatesசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

‘பொங்கலுக்கு பராக்’ என ஒரு போஸ்டரையும் அதிரடியாக வெளியிட்டு திரையுலகை அசர வைத்தனர்.

இதற்கு முன்பே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

ரஜினி படங்கள் வெளியானால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும்.

ஒருவேளை பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியானால் குறைந்த எண்ணிக்கையிலேயே தியேட்டர்கள் கிடைக்கும்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூகமான தீர்வை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்த படங்களுடன் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு படங்களின் மோதல் உறுதியானால், பேட்ட படம் ஜனவரி 15ஆம் தேதியும் விஸ்வாசம் படம் ஜனவரி 10ஆம் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Petta and Viswasam movies clash on Pongal news updates

Overall Rating : Not available

Related News

2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More

Latest Post