தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கடந்த மாதம் காஷ்மீரில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
சென்னையில் 25 நாட்கள் ஷெட்யூல் நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய தோற்றத்துடன் காணப்பட்டார். இவருக்கு கேரக்டர் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் அர்ஜுனுக்கு செயற்கையான மேக்கப் பயன்படுத்தியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அர்ஜுன் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் இணைகிறார்.
மேலும், அர்ஜுனைத் தொடர்ந்து, சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் மீண்டும் நடிகர்களுடன் இணைவார்கள் மற்றும் அவர்களின் பாகங்களின் படப்பிடிப்பை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Arjun Scenes & Makeup Updates in Vijay’s ‘Leo’