காலா காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்ட பக்கா-ராஸ்கல்

காலா காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்ட பக்கா-ராஸ்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pakka movie posterரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை ஏப்ரல் 27ல் ரிலீஸ் செய்யவிருந்தனர்.

ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு ஜீன் 7ல் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காலா அந்த தேதியிலிருந்து காலியானவுடன் மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடித்துள்ள பக்கா படத்தை வெளியிடுகின்றனர்.

இதில் ரஜினியின் தீவிர ரசிகையாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இவர்களுடன் பிந்து மாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்க, எஸ் எஸ். சூர்யா அவர்கள் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை அன்றைய தினத்தில் வெளியிடுகின்றனர்.

இதில் அரவிந்த்சாமி, அமலாபால், மீனா மகள் நைனிகா, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து மற்ற படங்களின் அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pakka and Baskar Oru Rascal release confirmed on 27th April as Kaala postponed

baskar oru rascal 27th april

Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu condemns Tamilnadu Cauvery Protestors attacked Policeகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்ற போது நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து சில நாட்களாகியும் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை.

அதுபற்றி தெரிந்துக் கொள்ள இன்று சிம்பு போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் வந்தார் சிம்பு.

அப்போது…

மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மற்றபடி எந்தப் பிரச்சனையும் செய்ய நான் இங்கு வரல.

ஐ.பி.எல் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் போராட்டக்கார்ர்கள் மீது திருப்பி தாக்குதல் நடத்தாமல் இருந்ததற்கு என் பாராட்டுகள்.” என்றார்.

சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் போலீஸ் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu condemns Tamilnadu Cauvery Protestors attacked Police

Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu at Police Commissioner office to question Why Mansoor Ali Khan arrestedகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வந்த வேளையில் சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என பலர் போராடி வந்தனர்.

அந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வரை சிறையில் உள்ளார்.

அதற்காக நியாயம் கேட்டு கமிஷ்னர் ஆபிஸ் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர், “ மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். கூடவே அவரது ரசிகர்களும் வந்திருந்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதால், சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கூறியதாவது…

‘”நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள வந்துள்ளேன். அவரை விடுதலை செய்யும்படி நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை கைது செய்தது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.” என்றார் அவர்.

Simbu at Police Commissioner office to question Why Mansoor Ali Khan arrested

ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் காலா; ஜூன் 15க்கு முன்பே வருகிறார்!

ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் காலா; ஜூன் 15க்கு முன்பே வருகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “காலா” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“கபாலி” திரைப்படத்தை அடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம், திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் போன்ற காரணங்களால் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், காலா திரைப்படம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் என பல முக்கிய நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Official Announcement Kaala release Confirmed 7th June 2018

Kala JUN 7 ad -2 Tamil

சூர்யாவுக்கு ஏப்ரல் 21; விஜய்க்கு ஏப்ரல் 25; பக்கா ப்ளானில் படக்குழு

சூர்யாவுக்கு ஏப்ரல் 21; விஜய்க்கு ஏப்ரல் 25; பக்கா ப்ளானில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriyaதமிழ் சினிமாவே கண்டிராத வேலை நிறுத்தத்தை அறிவித்து 50 நாட்களாக போராடி பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போது 50 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 20ந் தேதி முதல் படங்கள் ரிலீஸ் மற்றும் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் 62 படத்தின் சூட்டிங்கை வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தொடங்க இருக்கிறார்களாம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

அதுபோல் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் சூட்டிங்கை நாளை ஏப்ரல் 21ல் தொடங்கவுள்ளார் செல்வராகவன்.

இதில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங், சாய் பல்லவி நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைத்து இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

மே 1ல் இசை; ஜீன் 15ல் ரிலீஸ்; இரண்டு தேதிகளை குறி வைக்கும் காலா

மே 1ல் இசை; ஜீன் 15ல் ரிலீஸ்; இரண்டு தேதிகளை குறி வைக்கும் காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Audio launch and movie release date updatesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுக்குமே எல்லா மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தன் அரசியல் வருகையை ரஜினி அறிவித்துள்ள பின் காலா படம் வரவிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இப்படத்தை ஏப்ரல் 27ல் வெளியிட இதன் தயாரிப்பாளர் தனுஷ் தீர்மானித்திருந்தார்.

ஆனால் 48 நாட்கள் தமிழ் சினிமாவில் வேலைறிறுத்தம் நடைபெற்றதால் வெளியீட்டுக்கு தயாராகவிருந்த அனைத்து படங்களின் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

அதன்படி காலா படத்தை ஜீன் 15ல் அதாவது ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்.

காலாவை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்யாமல் போனதால் இந்த பட பாடல்களை மே 1 உழைப்பாளர் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Kaala Audio launch and movie release date updates

More Articles
Follows