2018 புத்தாண்டில் ஆரம்பமானது சூர்யா-செல்வராகவன் படம்

2018 புத்தாண்டில் ஆரம்பமானது சூர்யா-செல்வராகவன் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 2018 New Year day Suriya 36 started with Poojaதீரன், அருவி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அவரின் 36வது படத்தை தயாரிக்கவிருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதில் சூர்யா – சாய் பல்லவி இணைந்து நடிக்க இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார்.

இதன் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது .

வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ், S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

On 2018 New Year day Suriya 36 started with Pooja

karthi suriya 36

Breaking: ரஜினி புதிய இணையதளம்; அரசியல் மாற்றம் விரும்புவோர் இணையலாம்

Breaking: ரஜினி புதிய இணையதளம்; அரசியல் மாற்றம் விரும்புவோர் இணையலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth launched new website for his political partyகடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இதில் 20 ஆண்டுகளாக இவர் அரசியலுக்கு வரமாட்டாரா? என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் நேற்று தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கு வழக்கம்போல ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றை இணைக்க ஒரு புதிய இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்புவோர் அதில் இணையலாம் என தன் ட்விட்டரில் ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த இணையத்தள முகவரியில் உங்கள் பெயர் மற்றும் தேர்தல் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

www.rajinimandram.org

Rajinikanth launched new website for his political party

rajini grandma

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி; பப்ளிக்ஸ்டார் துரை சுதாகருடன் கூட்டணி

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி; பப்ளிக்ஸ்டார் துரை சுதாகருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu protest and Bigg Boss fame Julie entering into Cinemaஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.

இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

Jallikattu protest and Bigg Boss fame Julie entering into Cinema

ஏழையாக இருந்து முன்னேறிய ரஜினி ஏழைகளை ஏமாற்றமாட்டார்.. : நண்பர் ராஜ்பகதூர்

ஏழையாக இருந்து முன்னேறிய ரஜினி ஏழைகளை ஏமாற்றமாட்டார்.. : நண்பர் ராஜ்பகதூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini friend RajBahadur shares about Rajinis Political Entryரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவரது நெருக்கமான நண்பர் ராஜ் பகதூர் தன் அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…

நானும் ரஜினியும் ஒரே பள்ளியில் படித்து, ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.

படித்து முடித்து வேலை செய்யும்போது கூட ஒரே பஸ்ஸில் நான் டிரைவராகவும், ரஜினி கண்டக்டராகவும் பணியாற்றினோம் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன்.

பல நாட்கள் இரவு பகலாக நிறைய விஷயங்களை விரிவாக பேசியிருக்கிறோம்.

குறிப்பாக அரசியல் பற்றி நிறைய பேசி இருக்கிறோம்.

கடந்த மே மாதம் சந்தித்தபோது சுமார் 5 மணி நேரம் அரசியல் முடிவு குறித்து பேசினார். தீவிரமான மன நிலையில் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.

நான் கேட்டபோது, ‘‘ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் போக்கு முற்றிலும் மாறிவிட்டது.
கருணாநிதியும் களத்தில் செயல்படும் நிலையில் இல்லை. தமிழக மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்’’ என சொன்னார்.

ஒரு கட்டத்தில், ‘‘நான் அரசியலில் வரட்டுமா? உன்னுடைய கருத்தைச் சொல்’’ என்றார். அதற்கு நான், ‘‘என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தும் ஒன்றேதான்.

கண்டிப்பாக நீ (ரஜினி ) அரசியலில் இறங்க வேண்டும். தமிழக மக்களும், ரசிகர்களும் உன்னிடம் (ரஜினி ) அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீ (ரஜினி ) எந்த கட்சியிலும் சேராமல், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்’’ என அவரது கையை பிடித்துக்கொண்டு கூறினேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மீண்டும் அதேபோல பேசினார். கட்சி, சின்னம் குறித்து முடிவெடுத்ததாக சொன்னார்.

அரசியல் வருகை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். இப்போது ரஜினி அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நிச்சயமாக ரஜினியால் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் மாற்றம் வரும்.

ஏனென்றால் எனக்கு ரஜினியை நன்றாக தெரியும். அவர் ஒன்றை செய்கிறார் என்றால், அதனைப் பற்றி நன்றாக யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்.

ரஜினி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். கட்டாயம் தனிக் கட்சி தொடங்கி, தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்.

ஏழையாக இருந்து முன்னுக்கு வந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். மாதிரி ஏழைகளுக்கு நல்லது செய்வார்.

ரஜினியிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது வறுமையை போக்க நல்ல வழி செய்வார்.

மக்களுக்கு என்ன தேவையோ, பெண்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக செய்வார். அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்பதால் கட்டாயம் ஊழல் செய்யமாட்டார். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்.

ரஜினியின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? அரசியல் தெரியுமா? பொருளாதாரம் தெரியுமா? பூகோளம் தெரியுமா? என கேட்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு பதிலை தருகிறேன்.

எது நல்லது, எது கெட்டது என ரஜினிக்கு தெரியும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால்,” ரஜினி வழி, தனி வழி தான்” இப்போது சொன்னால் புரியாது. போகப் போக தெரியும். இவ்வாறு ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

Rajini friend RajBahadur shares about Rajinis Political Entry

விக்ரமின் தந்தையும் கில்லி நடிகருமான வினோத்ராஜ் மரணம்

விக்ரமின் தந்தையும் கில்லி நடிகருமான வினோத்ராஜ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams father actor VinodRaj expired todayநடிகர் சீயான் விக்ரம் அவர்களின் தந்தை வினோத் ராஜ் மரணம் . (வயது 80)

இவர் விஜய்யின் கில்லி படத்தில் த்ரிஷாவின் தந்தையாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் கீழ்க்கண்ட விலாசத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்: 8, முரளி தெரு, மகாலிங்கபுரம், கோடம்பாக்கம்

Vikrams father actor VinodRaj expired today

தன் அரசியல் வருகையை வரவேற்ற அமிதாப்-கமலுக்கு ரஜினி நன்றி

தன் அரசியல் வருகையை வரவேற்ற அமிதாப்-கமலுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini thanks to Amithab and Kamal for wishing his political entryஇந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன் அரசியல் நிலைப்பாட்டை அதிரடியாக அறிவித்தார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் (2021) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தனிக்கட்சி அமைத்து போட்டியிடுவேன் என உறுதியளித்துள்ளார்.

அவரின் அறிவிப்பை தொடர்ந்து திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களான அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எனவே இருவருக்கும் ரஜினிகாந்த் நன்றி என தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக

Amitabh Bachchan‏Verified account @SrBachchan
T 2758 – My dear friend , my colleague and a humble considerate human, RAJNIKANTH, announces his decision to enter politics .. my best wishes to him for his success !

Rajinikanth‏Verified account @superstarrajini
Rajinikanth Retweeted Kamal Haasan
Thank you very much for your kind wishes dear Kamal

More Articles
Follows