அருவி ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை..; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தடாலடி

அருவி ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை..; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தடாலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sr prabhuபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.

எனவே கமல் சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன் ட்விட்டர் பதிவில்..,

“ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது.

இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!! என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தன் ட்விட்டரில்…

While draft measures to curb piracy are commendable, it is highly undesirable to strangle freedom of expression in a civilized society as ours. Therefore request the goverment to heed our request.

#CinematographAct2021 #FreedomOfExpression

Producer SR Prabhu against for Cinematograph act 2021

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு கமல் சூர்யா விஷால் எதிர்ப்பு.; ரஜினி விஜய் அஜித் மௌனம்

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு கமல் சூர்யா விஷால் எதிர்ப்பு.; ரஜினி விஜய் அஜித் மௌனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Suriya Vishalபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தச் சட்டத்தின்படி ஒருமுறை சென்சார் (தணிக்கைக்கு) ஆளான படங்களை மறு தணிக்கை செய்ய கோர முடியும்.

மேலும் திரைப்பட கதைத் திருட்டு போன்றவற்றுக்காக கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க இச்சட்டம் வகை செய்யும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய வரைவு மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஏனைய பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், உள்ளிட்ட 1400 கலைஞர்கள் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் & கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் மௌனம் காக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Suriya Vishal against on Cinematograph act 2021

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன.? திரையுலகினர் எதிர்ப்பது ஏன்..?

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன.? திரையுலகினர் எதிர்ப்பது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematograph act 2021கடந்த சில தினங்களாக திரையுலகினரால் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பு என்றால் அது..”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021″ தான்.

அதை திரையுலகினர் எதிர்க்க காரணம் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்.

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021

பொதுவாக ஒரு திரைப்படம் மக்கள் பார்வைக்கு வரும் முன் சென்சார் செய்யப்படும்.

அந்த படத்திற்கு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ சான்றிதழை தணிக்கை குழு கொடுக்கும்.

தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.

தணிக்கை குழு வழங்கும் சான்றிதழ்களோடு சேர்த்து வயது வாரியாகவும் சான்றிதழ்கள் அதாவது ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இருக்கிறது இந்த புதிய சட்டம்.

அதாவது சென்சார் வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்ய முடியும்.

இன்னும் சொல்லப்போனால் அந்த தணிக்கை சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா மூலம் அதிகாரம் கிடைக்கும்.

மேலும், இதில் படத்தின் கருவோ அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோ மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.

இந்த சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் இந்திய அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது.

(கருத்து கேட்புக்கு கடைசி நாள் நேற்று ஜூலை 2.)

இதுபோன்ற பல திருத்தங்களை இந்த சட்டம் முன் மொழியவுள்ளதால் தங்கள் கருத்துச் சுதந்திரம் தடைப்படும் என படைப்பாளிகள் அச்சம் கொல்கின்றனர்.

எனவே தான் இந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரையுலகினர் எதிர்க்கின்றனர்.

Celebs against cinematograph act 2021

‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyமாடலிங் நடிகை என பெயர் பெற்றவர் நடிகை ஷனம் ஷெட்டி.

இவர் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவரை காதலிப்பதாக கூறினார்.

இவரும் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக காதலனை பிரிந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கமலுக்கு ஆதரவாக சில மாதங்களுக்கு முன்பு பேசினார்.

அதாவது சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை கடுமையாக சாடியிருந்தார்.

இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அடிக்கடி அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இவரின் புகாரினை பெற்றுக் கொண்ட திருவான்மியூர் போலீசார், சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Sanam shetty filed police complaint against her follower

விஷாலை மிரட்டும் வில்லனாக அஜித்-விக்ரம் பட நடிகர்

விஷாலை மிரட்டும் வில்லனாக அஜித்-விக்ரம் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baburaj actorரஜினி கமல் உள்ளிட்ட ஜாம்பவான்களே தங்கள் படத்தின் பெயரை அறிவித்துவிட்டு தான் பட சூட்டிங்குக்கு செல்கிறார்கள்.

தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ & ‘விக்ரம்’ ஆகிய படங்களும் அப்படித்தான்.

ஆனால் விஜய் அஜித் சூர்யா தனுஷ் முதல் தற்போது விஷால் வரை படத்திற்கு பெயரே வைக்காமல் ரேஸ் குதிரை போல நம்பரிலேயே அழைக்கின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம்…

தற்போது து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விஷால் 31’

விஷால் பிலிம் ஃபாக்டரி சார்பில் விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார்.

டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, ரமணா, நந்தா, உள்ளிட்டோர் நடிக்க யுவன் இசையமைக்க இந்த படத்துக்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்ய எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

இவர் ஏற்கெனவே தமிழில் ஜனா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Babu Raj to play antogonist in Vishal 31

சூர்யா பிறந்த நாளில் பாண்டிராஜ் தரவிருக்கும் மெகா ட்ரீட்

சூர்யா பிறந்த நாளில் பாண்டிராஜ் தரவிருக்கும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

இதில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, திவ்யா துரை உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுதான் முதன்முறையாகும்.

இப்படம் தொடர்பாக 2 சூர்யா ஸ்டில்கள் வெளியாகி வைரலானது.

இந்த ஜூலை மாதம் 23ம் தேதி சூர்யாவின் (46வது) பிறந்த நாள் வருகிறது.

அப்போது சூர்யா 40் பட பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகின்றது.

சூர்யாவுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு ஆகிய காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது ஜூலை 12 முதல் மீண்டும் காரைக்குடியில் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Director Pandiraj’s treat to Suriya fans

More Articles
Follows