தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை சிவா இயக்கிருந்தார்.
இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து இந்த இரு படங்களும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
வீரம் ரீமேக் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. வேதாளம் ரீமேக் உருவாகி வருகிறது.
இதில் இரண்டிலும் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணே நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.
படம் ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வரும் நிலையில், விவேகம் படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்களாம்.
இதிலும் பவன்கல்யாணே நாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், ரீமேக் உறுதி செய்யப்பட்டது அஜித் படமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Not released Vivegam movie will be remake in Telugu