விஜய்யை தொடர்ந்து பிரபாஸ்க்கு வில்லனாகும் நடிகர்

விஜய்யை தொடர்ந்து பிரபாஸ்க்கு வில்லனாகும் நடிகர்

Actor Neil Nitin Mukeshஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இதில் விஜய்க்கு வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தார்.

தற்போது இவர் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹோ என்ற படத்தி நடித்து வருகிறார் பிரபாஸ்.

அண்மையில் இதன் டீசரும் வெளியாகி பரபரப்பை உருவாக்கியது.

இன்னும் இப்படத்தின் நாயகி முடிவாகநிலையில் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி விலகலா? நீக்கப்பட்டாரா? சங்கமித்ரா குழு விளக்கம்

ஸ்ருதி விலகலா? நீக்கப்பட்டாரா? சங்கமித்ரா குழு விளக்கம்

shruti haasanநேற்று முன்தினம் சுந்தர்.சி இயக்கும் சரித்திர படமான ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக தகவல் வெளியானது.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஸ்ருதிஹாசன் விலகியதாக அவரது தரப்பில் இருந்து, ஓர் அறிக்கையும் வெளியானது.

இதனையடுத்து, அவர் விலகவில்லை. நாங்கள்தான் அவரை வெளியேற்றினோம்’ என்று தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த அறிக்கை குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் கூறியிருப்பதாவது, “ஸ்ருதிஹாசன் விலகியது குறித்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இந்த படத்தின் நிறுவனமும் எந்த வித அறிக்கையும் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்தி”என்று தெரிவித்துள்ளது.

பாபநாசம்-பைரவா படத்துடன் கனெக்ட்டாகும் காலா

பாபநாசம்-பைரவா படத்துடன் கனெக்ட்டாகும் காலா

Kamal Vijay stillsகபாலி படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, ரஜினியின் போட்டோக்கள் அதிகளவில் இணையங்களில் வெளியானது.

தற்போது அதே நிலைமைதான் காலா படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி, ரஞ்சித், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் போட்டோக்கள் இப்போது இணையங்களில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நெல்லை பாஷையில் ரஜினி பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முன் வெளியான பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்திருந்தார்.

விஜய் நடித்த பைரவா படமும் நெல்லையை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

Kaala movie connect with Papanasam and Bairavaa movie

சிம்பு பட விநியோகம் மிகச்சிறப்பு; தயாரிப்பாளர் மகிழ்ச்சி

சிம்பு பட விநியோகம் மிகச்சிறப்பு; தயாரிப்பாளர் மகிழ்ச்சி

simbu AAA movieஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க, யுவன் இசையமைக்க உருவாகியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இதில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா உள்ளிட்ட நான்கு நாயகிகள் நடிக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரித்து வருகிறார்.

இதன் முதல் பாகத்தை மட்டும் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த பாகத்தில் சிம்புவின் அறிமுக பாடல் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதால், அதனை நாளை முதல் சென்னையில் படமாக்கவிருக்கிறார்களாம்

இந்நிலையில், இப்படத்தின் முழு வியாபாரமும் (கோயம்புத்தூர் உரிமையை தவிர), தற்போதே மிகச்சிறப்பாக நல்ல விலைக்கு முடிந்து விட்டதாம்.

இதனால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Producer Michael Rayappan happy by his movie AAA trade deals

தாசரி நாராயணராவ் மறைவுக்கு கமல்-ரஜினி-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தாசரி நாராயணராவ் மறைவுக்கு கமல்-ரஜினி-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

kamal rajiniஇந்திய திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் காட்டிய தாசரி நாராயணராவ் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவையொட்டி, இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…, ‘தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர் கே.பாலச்சந்தர் பார்த்து வியந்தவர் தாசரி நாராயணராவ் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஜினி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.. “இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ்.

அவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுஇணை செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Kamal and Rajini Condole Death of Filmmaker Dasari Narayana Rao

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

My sympathy and condolences to the family of Daasari NaryaNa rao.His loss is truly a big loss for Telugu cinema. Late K.B. sir admired him

I remember the days spent with Narayan rao gaaru and Mr. Sanjeev kumar ji. Yaadgaar. He was a great fan of Mr.KB. I belong to a great family

Rajinikanth‏Verified account @superstarrajini

#RIP #DasariNarayanaRao ji

dasari narayana rao RIP

‘புத்தர் கதையில் கமலை இயக்கியிருந்தால்…’ – மிஷ்கின் ஓபன் டாக்

‘புத்தர் கதையில் கமலை இயக்கியிருந்தால்…’ – மிஷ்கின் ஓபன் டாக்

kamalhassanதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துக்கு சொந்தக்காரர்கள் கமல், மிஷ்கின் உள்ளிட்டோர் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் அப்படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் மிஷ்கின் தன் சமீபத்திய பேட்டியில் அது குறித்து கூறியுள்ளார். அதில்…

“ஒரு படத்தில் கமலும் நானும் இணையும் சூழல் வந்தது. புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை.

உண்மையான கதையில் என்னுடைய சில கற்பனைகளையும் சேர்த்திருந்தேன். புத்தரின் பல் எப்படி இலங்கை வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

பாடலிபுத்ராவிலிருந்து புத்தரின் மகளே அவரது பல்லை எடுத்துக் கொண்டு பயணம் செய்தார். கிழக்குப் பகுதியில் ஒரு துறைமுகத்தை அடைகிறார். அங்கிருந்து ஒரு கப்பலில் 14 நாட்கள் பயணம் செய்து இலங்கையை அடைகிறார். இதுதான் நிஜக்கதை.

எனது கதையில், அந்த பல் இலங்கை போகும் வழியில் அதை திருட பலர் முயற்சிக்கின்றனர்.

இதில் கமல்ஹாசன் ஒரு கொள்ளைக்காரன் கேரக்டரில் நடிக்கவிருந்தார்.

அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக, அந்த பல்லை எடுத்துச் செல்ல பணிக்கப்படுகிறார்.

உண்மை, நேர்மை, ஒழுக்கம் என எதைப்பற்றியும் தெரியாத ஒரு கொள்ளைக்காரன் அந்தப் பயணத்தில் சேர்ந்து, பல விஷயங்களை தெரிந்துகொண்டு கடைசியில் புத்தர் வழியில் செல்வதாக கதை உருவானது.

ரூ. 70 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் நிதி கிடைக்கவில்லை.

அன்றைய சூழலில் நான் கமலை வைத்து இயக்கியிருந்தால், சொதப்பியிருப்பேன்.

ஒருவேளை இனி வரும் ஆண்டுகளில் கமல்ஹாசனே அந்த கதையை இயக்கி நடிக்கலாம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

If I direct Kamal in Buddha script i might have spoiled says Mysskin

More Articles
Follows