8 முறை தேசியவிருது பெற்றவர் விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்தார்

sreekar prasadமெர்சல் படத்தை அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் சூட்டிங்கை ஜனவரி 3ஆம் வாரத்தில் தொடங்கி 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மலையாளத்தில் பிரபலமான கிரிஷ் கங்காதரன் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும் படத்தின் எடிட்டராக 8 முறை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர் ஏற்கெனவே விஜய், முருகதாஸ் கூட்டணியின் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post