தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவின் சி-3 திரைப்படம் டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் தேதியிலிருந்து, தற்போது 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் 16ஆம் தேதி தன்னுடைய போங்கு படத்தை வெளியிட இருக்கிறாராம் நட்ராஜ்.
இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரித்துள்ளனர்.
இதில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்க, முன்னாள் உலக அழகி ருஹிசிங் நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தாஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதையாம்.
இப்படத்தின் முக்கிய பாத்திரமாக காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அஹமதாபாத்தில் உள்ள ஒரு ஷோரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.