‘ரஜினிதான் ஹீரோ; என் மகன் அல்ல…’ படவிழாவில் நாசர் பேச்சு.

aishwaryaஅருமைச்சந்திரன் தயாரிப்பில், தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து செல்ல வா.

இதில் நாசரின் மகன் லுத்ஃபுதீன் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கெங், சதீஷ், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி, ஜோ மல்லூரி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் பட புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாசர் பேசியதாவது…

“என்னிடம் சொல்லாமலே என் மகன் லுத்ஃபுதீன் சைவம் படத்தின் ஆடிசனில் கலந்து கொண்டார்.

எந்தவொரு பயிற்சியில் இல்லாமல் நடிக்க கூடாது என திட்டினேன்.

பிறகு பயிற்சி எடுத்துக் கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது எனக்கு பேச கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது.

என் மகன் படவிழா என்றாலும் நான் மற்ற கலைஞர்களை போல் தான் அவனையும் பார்க்கிறேன்.

என் மகன் கதாநாயகன் என நினைக்கவில்லை. இயக்குனர் அவனை கதைநாயகன் என்றார்.

நானும் அதைதான் சொல்கிறேன். அவன் கதையின் நாயகன்தான்.

நாயகன் என்றால் அவருக்காக கதை இருக்கும். இப்போது உலகமே ஒரு தமிழ் (கபாலி) படத்தை எதிர்பார்க்கிறது. அவர்தான் தான் நாயகன்” என்று பேசினார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை…
...Read More
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “…
...Read More
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்…
...Read More

Latest Post