ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’.

6 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

சாம் சி. எஸ்

இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் சி. எஸ்

music director sam cs composed to bollywood tv serial

தமிழ் படங்களில் 5.. விஜய் படங்களில் 2.. வசூல் அள்ளிய ‘வாரிசு’ பட வரிசை பட்டியல்

தமிழ் படங்களில் 5.. விஜய் படங்களில் 2.. வசூல் அள்ளிய ‘வாரிசு’ பட வரிசை பட்டியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஜனவரி 11ல் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இதில் நாயகியாக ராஷ்மிகா நடித்து இருந்தார்.

பல திரையரங்குகளில் ‘வாரிசு’ படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

அம்பாசமுத்திரம் ஸ்ரீ பாலாஜி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களிலேயே வாரிசு திரைப்படம் தான் மிக அதிக அளவில் வசூலித்து ஒரு பென்ச் மார்க்கையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்-12) கூட கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து திரையரங்கிற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது.

திரையரங்க வரலாற்றில் சமீப காலமாக நடக்காத ஒரு ஆச்சரிய நிகழ்வு இது. குறிப்பாக ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு திரளாக வருகை தந்தது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது என்கிறார்கள் திரையரங்கு நிர்வாகத்தினர்.

சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் 26 ஆவது நாளில் 3 மணி காட்சி கூட ஹவுஸ்புல் காட்சியாக, அதிலும் 85 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் நிறைந்த காட்சியாக நிறைந்து இருந்தது.

திண்டுக்கல்லின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் உமா ராஜேந்திரா சினிமாஸில் 5-வது வாரத்திலும் கூட கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இந்த படத்திற்கு வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

குறிப்பாக தற்போது திரையிடும் திரைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டபோதும் கூட இதற்கு முன்பு வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை தாண்டி வாரிசு படம் சாதனை செய்துள்ளது.

திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனத்தினர், வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை தொடர்கிறது என்றும் ரெக்கார்ட் பிரேக்’கிங்’ என்றும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

வேலூரில் உள்ள விஷ்ணு திரையரங்கில் இந்த படத்தின் 25-வது நாளை ரசிகர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வட இந்தியாவில் வெளியாகிய வாரிசு படத்தின் இந்தி பதிப்பும் வெற்றிகரமாக 30 நாட்களை கடந்துள்ளது.

இப்போதும் கூட ரசிகர்களின் வரவு குறைவில்லாமல் இருப்பதால் நேற்றைய தினம் (பிப்-12) புவனேஸ்வரில் உள்ள சினி போலிஷ் திரையரங்கத்தில் ரசிகர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக சிறப்புக் காட்சியாக நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல வடக்கே பல திரையரங்குகளில் நேற்று (பிப்-13) திங்கள்கிழமையும் பாதி இருக்கைகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளன.

பிரான்சில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்திற்கு 25வது நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது என்றால் அது வாரிசு படத்திற்கு தான் என்கிற செய்தி வீடியோவுடன் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.

மலேசியாவில் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது மூன்றாவது வாரத்தில் இருந்து 10வது இடத்தில் இருந்தாலும் இப்போதும் 30 க்கும் குறையாத காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தரவரிசைப்படி பல திரையரங்குகளில் இன்னும் முதலிடத்தில் தான் வாரிசு திரைப்படம் இருக்கிறது.

விஜய் படங்களிலேயே இரண்டாவது முறையாக உலக அளவில் 300 கோடி வசூலை கடந்த படம் என்கிற பெருமையை பிகில் படத்தை தொடர்ந்து வாரிசு பெற்றுள்ளது.

அந்த வகையில் உலக அளவில் 300 கோடிகளை கடந்த ஐந்தாவது தமிழ்ப்படம் என்கிற பெருமையும் வாரிசு படத்திற்கு சேர்ந்துள்ளது.

5 among the Tamil films.. 2 among the Vijay films.. ‘Varisu’ film order list

பழனி முருகனிடம் சரணடைந்த சமந்தா .. மனம் உருகி வழிபாடு

பழனி முருகனிடம் சரணடைந்த சமந்தா .. மனம் உருகி வழிபாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனக்கு உடல் நலம் பெற வேண்டி பழனி மலையின் 600 படிகள் ஏறி கோயிலுக்குச் சென்றார் சமந்தா .

புனித பயணத்தில் அவருடன் ’96’ இயக்குனர் சி பிரேம் குமார் சென்றார். ஒவ்வொரு அடியிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார் அவர் . தற்போது தனது ஆட்டோ இம்யூன் நிலை, மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா . உடல்நிலை மற்றும் சாகுந்தலத்தின் வெற்றிக்காக முருகப்பெருமானின் ஆசீர்வாதத்தை நாடியதாக கூறப்படுகிறது.

சமந்தா பழனிக்கு வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Samantha’s visit to this auspicious Tamil temple rock the internet!

ஆதியின் ‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்தது…

ஆதியின் ‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்தது…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2009ல் ‘ஈரம்’ என்ற ஹிட் கொடுத்த நடிகர் ஆதியும், இயக்குனர் அறிவழகனும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்துக்காக இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு ‘ஈரம்’ படத்தின் ஒரு பகுதியாக இருந்த தமன் இசையமைத்துள்ளார்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

மூணாறில் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்தது.

இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மழைகள் நிறைந்த மூடுபனி மற்றும் பள்ளத்தாக்கில், ‘சப்தம்’ படத்தின் மூணார் அட்டவணை முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

சப்தம்

First schedule of Aadhi’s ‘Sabdham’ with wrapped up

நானும் ரஞ்சித்தும் நண்பர்கள்.; வெற்றிமாறன் ஜாதி படம் எடுத்தால் பாராட்டுகிறார்கள்.. – மோகன் ஜி

நானும் ரஞ்சித்தும் நண்பர்கள்.; வெற்றிமாறன் ஜாதி படம் எடுத்தால் பாராட்டுகிறார்கள்.. – மோகன் ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கியுள்ள ‘பகாசூரன்’ என்ற படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.

செல்வராகவன் நட்டி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது மோகன் ஜி பேசும்போது…

“நான் ஒரு இயக்குனராக வெற்றி பெற்று விட்டேன்.. தயாரிப்பாளராக வெற்றி பெறுவேனா என்பது மக்கள் கையில் தான் உள்ளது.

நானும் செல்வராகவனும் நிறைய பேசியிருக்கிறோம். செல்வராகவனைப் பார்த்தே சினிமாவுக்கே வந்தேன்.

தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன். நட்டி நட்ராஜை மனதில் வைத்து தான் படத்தை எழுதினேன்.

நானும் ரஞ்சித்தும் குறிப்பிட்ட சமூகத்திற்காக படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

நானும் ரஞ்சித்தும் பேஸ்புக் நண்பர்கள். அவரது படங்களை பார்த்து பாராட்டு தெரிவித்து இருக்கிறேன்.

சாதி இருக்கிறது என நான் சொல்லும்போது திட்டினார்கள். வெற்றிமாறன் சொல்லும்போது பாராட்டுகிறார்கள். யார் சொல்வது என்பதுதான் இங்கே முக்கியம்” என பேசினார் மோகன்ஜி.

Ranjith is my friend Mohan speech at Bakasuran event

இன்ஸ்டா தலைமுறைக்காக அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட மணிரத்னம்

இன்ஸ்டா தலைமுறைக்காக அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர்.

இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது.

“கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023) வெளியிட்டார்.

புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.

“அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது” என்று புத்தகத்தை வெளியிடுகையில் இயக்குனர் மணிரத்னம் குறிப்பிட்டார்.

“பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து, திரையில் பார்த்து ரசித்த இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவரது ஆளுமையைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார் சீதா ரவி.

220 பக்கங்கள் கொண்ட “கல்கி: பொன்னியின் செல்வர்” புத்தகத்தின் விலை ரூ.225/- வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 9 சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை 600017.

தொலைபேசி: 044-28340488

director Maniratnam launched the Biography of Kalki

More Articles
Follows