‘பார்க்கிங்’ செய்ய முடியாமல் தள்ளிப் போகும் பட ரிலீஸ்

‘பார்க்கிங்’ செய்ய முடியாமல் தள்ளிப் போகும் பட ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’.

இதில் நாயகியாக இந்துஜா நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Harish Kalyan starrer ‘Parking’ release postponed

பன்னி வாசு தயாரிப்பில் மீண்டும் இணைந்த நாக சைதன்யா – சாய்பல்லவி

பன்னி வாசு தயாரிப்பில் மீண்டும் இணைந்த நாக சைதன்யா – சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23.

இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன் வழங்குகிறார்.

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் NC23 தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மிக உயர்ந்த தரத்துடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் ஒரு பகுதியாக, இப்படத்தின் முன்னணி நாயகியாக இணைந்தார் சாய் பல்லவி.

NC23

சாய் பல்லவி இணைந்த புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாண்டமான படத்தில் கதாநாயகியாக நடிக்க மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகை சாய் பல்லவி வருகிறார் என்று தெரிவித்தது.

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு ‘சூப்பர்ஹிட் லவ் ஸ்டோரி’ படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#NC23 நாக சைதன்யா மற்றும் சந்து மொண்டேடி இணையும் இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் உயர் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

தயாரிப்பாளர்கள் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கே நல்ல பட்ஜெட்டை செலவு செய்கிறார்கள். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளது.

நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குனர்: சந்து மொண்டேட்டி
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாசு
PRO: யுவராஜ்
மார்க்கெட்டிங் : பர்ஸ்ட் ஷோ

NC23

Sai Pallavi Joins The Voyage Of Naga Chaitanya Shoot Begins Soon

‘ஜவான்’ படைக்கும் சாதனை இந்தியாவில் 500 கோடி.. உலகளவில் 1000 கோடி.!

‘ஜவான்’ படைக்கும் சாதனை இந்தியாவில் 500 கோடி.. உலகளவில் 1000 கோடி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது..!

ஷாருக்கான் தனது நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் பயணிக்கிறார்.

அத்துடன் அவரது நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரையுலகில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கி பயணிக்கிறது.

ஷாருக்கானின் ‘ஜவான்’ இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் பிரவேசித்திருக்கிறது.

அத்துடன் உலகளவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதற்கு உத்வேகத்துடன் பயணிக்கிறது.

இந்த திரைப்படம் தென்னிந்திய திரையுலக சந்தையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றதாகும். இந்தத் திரைப்படம்150 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புத்தகத்தில் புதிய பக்கங்களை எழுதி, தென்னிந்திய திரையுலக சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

இந்த படத்தின் பிரமிக்க வைக்கும் வெற்றியானது இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும்..

உலகெங்கிலும் உள்ள சாதனைகளை முறியடிக்கும் பாதையையும் உருவாக்கியுள்ளது.

உலக பாக்ஸ் ஆபீசில் 907 கோடியே 54 லட்சம் ரூபாயை வசூலித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்து, ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியானது.

Jawan sets new record enters 500cr club in india globally nearing 1000cr

‘இந்த கிரைம் தப்பில்ல’… அரசியல்வாதி திருமாவளவன் திடீர் ஆதரவு

‘இந்த கிரைம் தப்பில்ல’… அரசியல்வாதி திருமாவளவன் திடீர் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் ‘இந்த கிரைம் தப்பில்ல’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் MP வெளியிட்டார்.

‘இந்த கிரைம் தப்பில்ல’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவகுமார்.

இந்த கிரைம் தப்பில்ல

இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த கிரைம் தப்பில்ல

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.

இந்த கிரைம் தப்பில்ல

Indha Crime Thappilla First Look launched by Thirumavalavan

நேர்மையாக வாழ முடியுமா.? சமுத்திரக்கனி-யின் கேரக்டர் சொல்லும் நந்தா பெரியசாமி

நேர்மையாக வாழ முடியுமா.? சமுத்திரக்கனி-யின் கேரக்டர் சொல்லும் நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘திரு.மாணிக்கம்’.

மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான்… என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.

தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி.

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், வெண்பா, சரவணன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பான திரு.மாணிக்கம்.

இத்திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் FIRST LOOK ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா…? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா..? என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது.

கதையின் நாயகன் மாணிக்கத்தின் மனைவி… அவனுடைய பெரியப்பா… பெரியம்மா… மச்சினன்… மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது..

கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்… அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது.

இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான் என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் சாராம்சம்.

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்

ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் எனப் பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார்.

பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

சமுத்திரக்கனி மூலம் ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார்.

பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூமுருகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியும் அவனைக் கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாக்கியுள்ள இப்படத்தை GP ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் TEASER பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Samuthirakkani starrer Thiru Manickam first look updates

நடிகை ரேஷ்மி துணையுடன் ‘தடை உடை’-த்து வரும் பாபி சிம்ஹா

நடிகை ரேஷ்மி துணையுடன் ‘தடை உடை’-த்து வரும் பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் N.S ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் படம் ‘தடை உடை’.

‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமாரசாமி, ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணன், மற்றும் ‘கட்டப்பாவை காணோம்’ பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய N.S ராகேஷ்.

இப்படத்தின் நாயகியாக மிஷா ரங் நடிக்க, ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை Mudhra’s film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

bobby simha’s Thadai Udai movie first look released

More Articles
Follows