நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் கொரோனா நிதியளித்த எர்ணாவூர் நாராயணன்

நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் கொரோனா நிதியளித்த எர்ணாவூர் நாராயணன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றது.

எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

நாடார் பேரவை, நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.

எம் ஜி ஆர் , ஜெயலலிதா நினைவிடங்கள் போல் காமராஜர் நினைவிடமும் புதுப்பொலிவு பெற வேண்டும்” என்றார் எர்ணாவூர் நாராயணன்.

Ernavur Narayanan donated Rs 1 crore to CM corona relief fund

கிரிக்கெட்டர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது..; ஹீரோ இவரா?

கிரிக்கெட்டர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது..; ஹீரோ இவரா?

sourav gangulyபிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.

மகாத்மா காந்தி முதல் ஜெயலலிதா வரை வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகியுள்ளது.

அரசியல் தலைவர்களை போல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரின்
வாழ்க்கையும் சினிமாவாகி பெரும் வெற்றி பெற்றன.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்றது.

தற்போது ஜீவா நடிப்பில் ’83’ என்ற பெயரில் இது உருவாகி விரைவில் வெளியாகவுள்ளது.

இதுபோல் டாப்ஸி நடிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் சினிமாவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது.

சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.

சவுரவ் கங்குலி கேரக்டரில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Star Actor in talks for Sourav Ganguly Biopic?

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சர் சாமிநாதன் பதில் இதோ…

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சர் சாமிநாதன் பதில் இதோ…

சென்னை கிண்டி பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஆய்வு மேற்கொண்டார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தான் காந்தி மண்டபத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தற்போது கொரோனா வைரஸ் 3வது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனைக்கு பிறகே தீர்க்கமான முடிவெடுக்க முடியும்” எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

When Will theatres reopen in Tamil Nadu ?

ஸ்டாலின் சிறப்பா பண்றாரு.. ஆட்சி ரொம்ப நல்லாயிருக்கு..- விஜய்சேதுபதி

ஸ்டாலின் சிறப்பா பண்றாரு.. ஆட்சி ரொம்ப நல்லாயிருக்கு..- விஜய்சேதுபதி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்தாண்டில் இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ மற்றும் ‘உப்பென்னா’ ஆகியவை பெரிய வெற்றியை பெற்றன.

இவரது நடிப்பில் ‘லாபம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய ஹிந்தி வெப் தொடரில் நடிக்கிறார்.

சினிமாவை தவிர்த்து சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.

தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

சன் டிவி-யில் தொகுத்து வழங்கவிருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் ப்ரொமோஷனல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.

அதில் பேசிய விஜய்சேதுபதி…

‘மாஸ்டர் செஃப்’ ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு…

” காரணம் எதுவுமே இல்ல. அந்த புரோம்கிராம் குழுவினர் வந்து பேசினார்கள் எனக்கு பிடித்திருந்தது.

விக்னேஷ் சிவன் தான் அவர்களை அனுப்பி வைத்திருந்தார். எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஓகே பண்ணிட்டேன்.

எனக்கு பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் செய்யவே மாட்டேன். ” என்றார்

திமுகவின் 2 மாத ஆட்சி குறித்து கேட்டதற்கு…

ஸ்டாலின் சிறப்பா ஆட்சி பண்றாரு. நான் என்னருகே இருப்பவர்களிடம் கேட்டேன். அவர்களும் ஆட்சி நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

ஸ்டாலினை சந்தித்து பேசிய போது அவரிடமும் ஆட்சி குறித்து சொன்னேன்” என ஊடக பேட்டியில் தெரிவித்தார்.

மாஸ்டர் செஃப் தமிழ் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி சன் டிவியில் தொடங்க இருக்கிறது.

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இது ஒளிபரப்பாக இருக்கிறது. மொத்தம் 14 வாரங்கள் நடைபெறும் என்றும் 15வது வாரம் கிராண்ட் ஃபினாலே நடைபெறும்

Vijay Sethupathi praises CM Stalin

உதவி இயக்குனர்களுக்கு உதவும் நல்லுசாமி பிக்சர்ஸ்.; ஐந்து பிரபல இயக்குனர்கள் ஆதரவு

உதவி இயக்குனர்களுக்கு உதவும் நல்லுசாமி பிக்சர்ஸ்.; ஐந்து பிரபல இயக்குனர்கள் ஆதரவு

இளம் இயக்குநர்களின் திரை கனவுகளை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், உதவி இயக்குநர்களின் சிறந்த கதைகளை குறும்படங்களாக தயாரிக்க ஆரம்பித்துள்ளது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம்.

தயாரிப்பாளர் தாய் சரவணன் இந்த வகையில், தனது முதல் தயாரிப்பாக,
நான்கு குறுங்கதைகள் இணையும் சுவாரஸ்யமான ஹைப்பர் லிங்க் திரில்லராக, உருவாகியிருக்கும் Triquetra திரைப்படத்தை இயக்குநர் அசோக் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார்.

Triquetra என்பது வாழ்வின் மூன்று முனைகளை குறிக்கும் சொல், நான்கு கதைகள் ஒன்றாக பயணிக்கும் ஹைப்பர் லிங்க் வகையில், கோயம்புத்தூரை பின்னணி களமாக கொண்டு, சுவாரஸ்ய திரில்லராக, இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தினை இயக்கியுள்ள இயக்குநர் அசோக் தமிழின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன் அவரகளிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

திரைப்படங்களில் உதவியாளர்களாக பணிபுரிந்த நண்பர்களை கொண்டு, இந்த திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் வரை இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் புதுமுகங்களே.

சுவாரஸ்யம் நிரம்பி வழியும் இக்குறும்படத்தினை, நாளை 14 ஜூலை 2021 அன்று காலை 11 மணிக்கு, இயக்குநர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி, துரை செந்தில்குமார், ராம் பிரகாஷ், திரு ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிடவுள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Nallu Samy pictures to produce short films in their banner

அஜித் பட அப்டேட் கொடுத்த BJP MLA வானதி.; வெட்கம் மானம் சூடு சொரனை இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி

அஜித் பட அப்டேட் கொடுத்த BJP MLA வானதி.; வெட்கம் மானம் சூடு சொரனை இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘வலிமை அப்டேட் ’ வேண்டும் என கேட்டிருந்தார்.

இதற்கு வானதி பதிலளிக்கையில்.. “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும்” என்று பதில் அளித்து இருந்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமலை தோற்கடித்து வானதி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கு பிறகு ஜூலை 11ல் அஜித்தின் ‘வலிமை’ பட மோசன் போஸ்டர் வெளியானது.

இதை விட்டு வைக்காத வானதி…

“#ValimaiUpdate -> #ValimaiUpdated

நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது https://t.co/Yc1DANGJlg என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.

அதில் சில கமெண்ட்ஸ்கள்….

ஒருவரின் உழைப்பிற்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவதா?

அடுத்தவர் உழைப்பை திருடுவது அசிங்கம்

த்து வெக்கமா இல்ல உங்களுக்கு. கோயம்புத்தூர்ல vaccine இல்ல, உங்க தொகுதில பல இடத்தில மழை வந்த தண்ணி தேங்கி நிக்குது இதெல்லாம் சரி பண்ண துப்பில்ல. வந்துதிங்க #valimai update னு சொல்லிக்கிட்டு. valimai update க்கும் உங்களுக்கு என்ன சம்மந்தம் என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

கொஞ்சம்கூட வெட்க்கம் மானம் சூடு சொரனை எதுவும் இல்லைபோல…..

ஓட்டு போட்ட மக்கள் தடுப்பூசி இன்று உள்ளனர். மத்தியில் ஆட்சியில் உள்ள உங்கள் ஒன்றிய அரசிடம் கேட்டு அதை பெற்று தர வக்கில்லை…

இங்கு வலிமை அப்டேட் கேக்குதோ…

வானதி மேம்
கோவைல உங்கள மக்கள்
காரி துப்புராகலாமே

வெற்றி பெற்ற உடன் என்று உறுதிமொழி அளித்தீர்கள்
ஆனால் இரண்டரை மாதம் கழித்துதான் வலிமை அப்டேட் வந்துள்ளது
சாதாரண வலிமை அப்டேட்டுக்கே இரண்டரை மாதம் ஆகும் என்றால் மக்கள் பிரச்சனையை எப்படி சீக்கிரம் முடிப்பீர்கள் ???
அப்ப இந்த வருடம் மனு கொடுத்தால் அடுத்த வருடம் தான் சரி செய்வீர்களா??

Netizens slams BJP MLA Vanathi Srinivasan

More Articles
Follows