எம்.ஜி.ஆர். போல அந்த பட்டத்துடன் நடிக்க ஆசைப்பட்டாலும் சினிமாவை விட்டு விலக கமல் முடிவு..!

சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையின் இவரது மற்றொரு பேட்டியில்..

“நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்

ஒருவேளை என்னுடைய அரசியல் பணிக்கு சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டு விலகி விடுவேன்.

MLA என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார். அதே போல நானும் நடிப்பேன்.

ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா? என பிறகே முடிவு எடுப்பேன்.

அரசியலுக்கு வந்த பின்னர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு கூட எனக்கு மிரட்டல் வந்தது.
இனி எனது மீதமுள்ள வாழ்க்கை மக்களுக்காக தான்..”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Actor Kamal Haasan to quit cinema industry ?

Overall Rating : Not available

Latest Post