இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கதையின் தன்மையையும் திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

எதார்த்த வாழ்வியலுக்கு “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்கு “சிகரம் தோடு, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” என படத்திற்கு படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களை தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார்.

விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்.

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் “ கடமான்பாறை “

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – T.மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன் , மன்சூரலிகான்.
வசனம் – R.துரை
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார்
கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது…

நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படம் இம்மாதம் 23 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

வேலையில்லாதவரா நீங்க? நம்ம விஜய்சேதுபதி வேலை வாங்கி தர்றார்

வேலையில்லாதவரா நீங்க? நம்ம விஜய்சேதுபதி வேலை வாங்கி தர்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi giving opportunity for jobless peoples வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற இயக்கத்தின் மூலமாக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டு வருகிறது.

இந்த இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 5 மாதங்களாக நடிகர் விஜய்சேதுபதி இந்த இயக்கத்திற்கு உதவி செய்து, தமிழகம் முழுவதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், விஜய் சேதுபதியின் துணையோடு தமிழகம் முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த இயக்கம் பொதுமக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றுள்ளது.

Vijay Sethupathi giving opportunity for jobless peoples

இதன், வீடியோ இணைப்பு…

சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

YG Madhuvandhi says she is waiting for challenging characters சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உறவினர் நடிகர் ஒய்ஜி. மகேந்திரன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.

Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார்.

Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார்.

இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையெற்றப்பட்டது.

பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார்.

தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை Y.G.மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.

குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் Y.G.மதுவந்தி.

YG Madhuvandhi says she is waiting for challenging characters

சென்சார் கெடுபிடியில் சிக்கி தவிக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ தமிழ் வெர்சன்

சென்சார் கெடுபிடியில் சிக்கி தவிக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ தமிழ் வெர்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paris Paris movie going to Censor revising committee ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரித்து இருக்கிறார்.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

Paris Paris movie going to Censor revising committee

ரஜினி ரசிகர்களை காயப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த ஜெயம்ரவி

ரஜினி ரசிகர்களை காயப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த ஜெயம்ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini sir portion will be deleted in Comali says Jayam Raviநான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன். அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.

என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்துவருகிறேன்.

எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம்வருகிறேன். நான் நடித்து ஆகஸ்ட் 15 வெளியாகவிருக்கும், *‘கோமாளி’* திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது.

இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருந்தாலும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் ஒரு சில ரசிகர்களின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது.

அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது நடிப்பும் ஸ்டைலும் எங்கள் இயல்பிலேயே ஊறிப்போயிருக்கும் தவிர்க்க இயலாத விஷயங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.

முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது.

எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார்.

இருந்தபோதும், எந்த விதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியைப் படத்தில் இருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம்.

15.8.2019 அன்று திரையரங்குகளில் கோமாளியாக உங்களைச் சந்திக்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.

Rajini sir portion will be deleted in Comali says Jayam Ravi

More Articles
Follows