தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘மாவீரன்’ படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பிரபல நிறுவனமான் ஹாம்சினி மற்றும் ஹகிம்சா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
maaveeran movies overseas release rights bagged by hansini entertainments