சிவகார்த்திகேயனை ‘மாவீரன்’ அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது – அதிதி

சிவகார்த்திகேயனை ‘மாவீரன்’ அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது – அதிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & அதிதி நடித்த ‘மாவீரன்’ படத்தின் வெற்றி விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை அதிதி பேசியதாவது…

” பத்திரிக்கை நண்பர்கள் படத்தை பற்றி நேர்மையான விமர்சனம் கொடுத்து அதை பார்வையாளர்களுக்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. இயக்குநர் அஸ்வின் சார் சொன்னதை தான் நடித்துள்ளேன்.

படத்தில் முதல் நாளிலிருந்து எனக்கு ஆதரவு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி! எனக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் பரத் சாருக்கும், உடன் பாடிய எஸ்.கே. சாருக்கும் நன்றி.

படம் வெளியான முதல் நாள் திரையரங்குகளில் முதல் ஐந்து நிமிடம் மட்டும்தான் என்னுடைய படம் என்று பார்த்தேன். அதன் பிறகு, பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படத்தை என்ஜாய் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவ்வளவு சிரித்து, இரண்டாம் பகுதியில் அவ்வளவு எமோஷனலாக பார்த்தேன்.

ஒரு நடிகராக எஸ்.கே. சாரை இந்தப் படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற இயக்குநர் மீது படக்குழு வைத்த நம்பிக்கைதான் காரணம்.

சரிதா மேம் திறமையான நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. என்னுடைய சக நடிகர் எஸ்.கே சார் அவருக்கு நன்றி. முதல் நாளில் இருந்து எங்களை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்துள்ளார். சினிமா துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர். தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தை பார்த்து ஆதரவு கொடுத்து உங்கள் அனைவருக்கும் நன்றி”.

மாவீரன்

Aditi Sankar talks about Maaveeran and Siva

சிவா படத்தில் சம்பளம் பேசாதேன்னு மிரட்டினார் விஜய்சேதுபதி.. – அருண் விஸ்வா

சிவா படத்தில் சம்பளம் பேசாதேன்னு மிரட்டினார் விஜய்சேதுபதி.. – அருண் விஸ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & அதிதி நடித்த ‘மாவீரன்’ படத்தின் வெற்றி விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா…

“இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி! படத்திற்கு ஸ்பெஷலாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நாங்கள் கேட்டதும் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் சம்பளம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்று எங்களை மிரட்டி தான் அனுப்பினார்.

நன்றி தலைவா! தெலுங்கில் குரல் கொடுத்த ரவிதேஜா சாருக்கு நன்றி. தயாரிப்பாளராக என்னுடைய முதல் படத்தின் இந்த வெற்றி முக்கியமானதாக நான் பார்க்கிறேன் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் மடோனா அஸ்வின்…

“இந்தப் படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

வாய்ஸ் ஓவர் கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறந்த உழைப்பைக் கொடுத்து ‘மாவீரன்’ உலகத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி”.

மாவீரன்

Maaveeran producer talks about Vijaysethupathi salary

என்னுடைய முதல் பட வெற்றி போல ‘மாவீரன்’ வெற்றியை உணர்கிறேன் – சரிதா

என்னுடைய முதல் பட வெற்றி போல ‘மாவீரன்’ வெற்றியை உணர்கிறேன் – சரிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகை சரிதா பேசியதாவது…

“இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்த்ததுதான். இதன் வெற்றி என்னுடைய முதல் படம் வெற்றி போல தான். அப்பொழுது என்னால் அந்த வெற்றியை உணர முடியவில்லை. ஆனால், இப்பொழுது பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸ் பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

நான் படத்தை நான்கு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் அனைவரும் படத்தை என்ஜாய் செய்து பார்க்கிறார்கள். அருண், அஸ்வின், சிவா மற்றும் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்”.

மாவீரன்

Maaveeran success I feel like first movie says Saritha

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த நல்ல காரியம்

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த நல்ல காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சிவகுமாரின் மகனாக முதன் முதலில் அடையாளம் காணப்பட்டவர் சூர்யா.

அதன் பிறகு ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்ட சூர்யா ஒரு தயாரிப்பாளராகவும் மாறி தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வருகிறார்.

தற்போது ‘சூரரைப் போற்று’ ஹிந்தி பட ரீமேக்கை தயாரித்து வருகிறார்.

சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் சார்ந்த சேவைகளில் இவரது அகரம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 5000+ மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா.

இவருக்கு நடிப்பின் நாயகன் என்ற பட்டத்துடன் நற்பணி நாயகன் என்ற பெயரும் உண்டு.

சூர்யாவை போல அவரது ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு சூரியா ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நலத்திட்டங்களுக்கும் தயாராகி வருகின்றனர்.

இன்று ஜூலை 21ல் பழனி உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை சூர்யா ரசிகர்கள் வழங்கினர்.

சூர்யா

Suriya fans donated Cloth bags for public

ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் ரூ.2 கோடி வசூல் செய்து பணமோசடி

ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் ரூ.2 கோடி வசூல் செய்து பணமோசடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகெங்கிலும் தமிழ் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கருதப்படும் ரஜினிக்கு எளிமையான மனிதர் என்ற நல்ல பெயர் உண்டு.

இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் நிறைய பக்கங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் ஒரு சில பக்கங்கள் ரஜினி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தை தொடங்கி சிலர் பணமோசடி செய்துள்ளனர்.

எனவே இதனையடுத்து ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில்.. ரூ.2 கோடி வசூல் செய்து 200 பேர் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக பண மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Fraud case in the name of Rajinikanth foundation

குதிரை மீது சூர்யா.; ‘கங்குவா’ படத்தின் கலக்கல் போஸ்டர் வெளியீடு

குதிரை மீது சூர்யா.; ‘கங்குவா’ படத்தின் கலக்கல் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

“கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், “கங்குவா” படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், குதிரையின் மீது நீண்ட முடியுடன் சூர்யா அமர்ந்து செல்வது போன்று வித்தியாசமான லுக்கில் உருவாகியுள்ளது

இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறார்கள்.

The makers of suriya’s ‘Kanguva’ launch the second poster of the film

More Articles
Follows