தியேட்டர்களில் மகா வசூல் செய்த ‘மாவீரன்’ ஓடிடி-யில் ரிலீசானது

தியேட்டர்களில் மகா வசூல் செய்த ‘மாவீரன்’ ஓடிடி-யில் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாவீரன்’ திரைப்படம் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இப்படம் தற்போது வரை ரூ.89 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்

Sivakarthikeyan’s Maaveeran to release on Amazon Prime

‘அடியே..’ வழக்கமான படமில்லை.; ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் – ஜீ. வி. பிரகாஷ்

‘அடியே..’ வழக்கமான படமில்லை.; ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் – ஜீ. வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்….

‘ அடியே மிகவும் வித்தியாசமான படம். வழக்கமான படம் கிடையாது. ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் ஸ்டோரி. இதுவே மிகப்பெரிய சவாலாக இருந்தது.

சென்னையில் பனிமழை பொழியும் என்பார். ஆனால் அதனை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது.

படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம்.

நான் அண்மைக்காலமாக பணியாற்றியதில் சிறந்த பட தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று உறுதியாக சொல்வேன். இந்த நாளில் இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் அது உறுதியாக நடக்கும். அவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

நம் நேரத்தையும் வீணடிக்க மாட்டார்கள். நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இதனால் இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்.

நடிப்பை பொறுத்தவரை கௌரி கிஷன், மதும்கேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநருக்கு ஒரு கற்பனையான காட்சி அமைப்பு இருந்தது. ஃபியூச்சரஸ்டிக்.. மல்டிவெர்ஸ்.. இதையெல்லாம் எழுதுவதற்கு எளிதாக இருக்கும். எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

ஆனால் அதை எல்லாம் அவர்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் அருமையான இசை ஆல்பத்தை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

அடியே

Adiyae is not an usual movie says GV Prakash

உலக சினிமாவில் முதன்முறை.. கௌதம் மேனன் கோபித்துக் கொள்ளமாட்டார்…. – வெங்கட் பிரபு

உலக சினிமாவில் முதன்முறை.. கௌதம் மேனன் கோபித்துக் கொள்ளமாட்டார்…. – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்…

” உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது.

கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது. அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன்.

இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர்.

இந்த திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானியாகவும், மற்றொன்று கெளதம் வாசுதேவ் மேனனாகவும் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான்.

இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தயாரிப்பாளரை முதன்முதலாக அவரது வீட்டில் சந்திக்கும் போது எனக்கு தெய்வீக அனுபவம் தான் ஏற்பட்டது.

நான் இந்த படத்தில் நடிக்கும் போது ஜீ. வி. பிரகாசுடன் தான் நடித்தேன். இதற்காக படப்பிடிப்பு தளத்தில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல மனதுக்காரர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் ஜோதிட கலையிலும் வித்தகராக இருக்கிறார். எனக்கு அவர் சொன்ன ஜோதிடம் பலித்தது.

ஜீ.வி. பிரகாஷ் குமார் இந்த படத்தில் கடினமான எப்போதும் குழப்பத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சியில் குழப்பமான மனநிலையில் நடித்து முடித்தவுடன்.. ஓய்வு கிடைக்கும் போது படப்பிடிப்பு தளத்திலேயே தொலைபேசி மூலம் இசை குறிப்புகள் குறித்து பேசுவார். பன்முக திறன் படைத்த கலைஞர்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்.. உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

அடியே

Myself acted as director Gautammenon says Venkat Prabu

’96’ பட சூழல் ‘அடியே..’ படத்திலும் எனக்கு ஏற்பட்டது.. – கௌரிகிஷன்

’96’ பட சூழல் ‘அடியே..’ படத்திலும் எனக்கு ஏற்பட்டது.. – கௌரிகிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்….

” இந்த நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கும் நடிகர் பிரேம்ஜிக்கு வணக்கம். இந்தத் திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் முக்கியமான படம்.

என்னுடைய வாழ்க்கையில் ’96’ படத்தில் எப்படி நடிக்க சம்மதித்தேனோ… அதேபோன்று ஒரு சூழல் இந்த படத்திலும் ஏற்பட்டது. 96 படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஏராளமான கதைகளை கேட்டேன். ஆனால் சில கதைகள் மட்டும் தான் மனதிற்கு நிறைவாக இருந்தது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். இயக்குநருடைய (விக்னேஷ் கார்த்திக்) அடுத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த படத்தில் செந்தாழினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவள் உறுதி மிக்கவள். அன்பானவள். பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரம். பல கோணங்களையும் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பிலும் நடித்து வருகிறேன். சில தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே நேர் நிலையான தாக்கங்கள் இருக்கும். அந்த வகையில் இந்த நிறுவனம் இன்னும் பல திரைப்படங்களை தயாரித்து தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர வேண்டும். உயர்வார்கள்.

ஜீ.வி. பிரகாஷ் குமார் மிகவும் அன்பான சக நடிகர். எளிமையானவர். இனிமையானவர். தன்மையானவர்.

‘அடியே’ திரைப்படத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்க பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அடியே

96 movie situation happened at Adiyae movie says Gowri

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம்.?! நடிகர் விஷால் ட்விட்டரில் திடீர் பதிவு

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம்.?! நடிகர் விஷால் ட்விட்டரில் திடீர் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு… ‘பாண்டியநாடு’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய இரு படங்களில் விஷால் மற்றும் லட்சுமிமேனன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்தப் படங்கள் வெளியானது முதலே இருவருக்கும் காதல் என்ற செய்திகள் அவ்வப்போது வந்தன.

ஆனால் அதன் பிறகு இருவரும் அவரவர் பாதைகளில் பயணிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

நம் FILMISTREET தளத்தில் அப்படி எந்த ஒரு தவறான செய்தியும் பதிவிடவில்லை.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை தன்னுடைய twitter பக்கத்தில் விஷால் இந்த திருமணம் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் பதிவில்..

“பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை மறுக்கிறேன்.

என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.

நான் யாரை திருமணம் செய்வேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”

இவ்வாறு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

It’s not Bermuda triangle to decode Vishal about his marriage rumours

BREAKING ரஜினி கமல் பட நாயகியும் பாஜக எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்

BREAKING ரஜினி கமல் பட நாயகியும் பாஜக எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 1980 1990 ஆகிய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜெயப்பிரதா.

‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் கமல் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் ‘சலங்கை ஒலி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ படத்திலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேணி’ என்ற படத்திலும் ஜெயப்பிரதா நடித்திருந்தார்.

சினிமா புகழின் உச்சத்தில் இருந்த போதே 1990களில் திடீரென ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தேசிய அரசியலிலும் பங்கேற்றார்.

தற்போது பாஜகவின் எம்பி யாக பதவி வகித்து வருகிறார் ஜெயப்பிரதா. அவருக்கு தற்போது 60 வயதாகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்து இருந்தனர்.

எனவே அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.

ஜெயப்பிரதா

HighCourt Sentences Actress JayaPrada to 6 Months in ESI Case

More Articles
Follows