OFFICIAL : உலகளவில் வசூல் வேட்டை செய்த ‘மாவீரன்’

OFFICIAL : உலகளவில் வசூல் வேட்டை செய்த ‘மாவீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மாவீரன்’ படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாவீரன்

Sivakarthikeyan’s ‘Maaveeran’ rakes in Rs 75 crores at the box office

‘லியோ’ இசை வெளியீடு எப்போ.? விமான நிலையத்தில் விஜய்.. தளபதி 68 அப்டேட்

‘லியோ’ இசை வெளியீடு எப்போ.? விமான நிலையத்தில் விஜய்.. தளபதி 68 அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மேலும் விஜய், சுற்றுலா முடிந்த பிறகு ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

vijay going for short vacation to abroad

Lets Get Married தெலுங்கு ரிலீஸ் அப்டேட் இதோ..

Lets Get Married தெலுங்கு ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படம் தெலுங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘எல்.ஜி.எம்’ படத்தின் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஜே.பி.ஆர் பிலிம்ஸ், திரிபுரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

மேலும், இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

எல்.ஜி.எம்

‘Let’s Get Married’ telegu releasing on August 4th

பிரபல நடிகர் ஜெயந்த் சவார்கர் மரணம்.; திரையுலகினர் இரங்கல்!

பிரபல நடிகர் ஜெயந்த் சவார்கர் மரணம்.; திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏராளமான மராத்தி மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் ஜெயந்த் சவார்கர்.

ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

குறிப்பாக ‘ஹரி ஓம் விதாலா’, ’66 சதாசிவ்’, ‘சிங்கம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்

சினிமா மட்டுமின்றி, சின்னத்திரையிலும் அவர் நடித்து இருக்கிறார்.

இவர் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வருகிறார்.

வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில் ஜெயந்த் நேற்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

மேலும், நடிகர் ஜெயந்த் சவார்கர் மறைவிற்கு பாலிவுட் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous Marathi actor Jayant Savarkar dies at 87

‘சந்திரமுகி 2’ -காக 2 மாதம் தூக்கத்தை தொலைத்த ஆஸ்கர் வின்னர்

‘சந்திரமுகி 2’ -காக 2 மாதம் தூக்கத்தை தொலைத்த ஆஸ்கர் வின்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான ‘ஆஸ்கார் நாயகன்’ எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

எம். எம். கீரவாணி

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”லைக்கா புரொடக்ஷன்ஸின் ‘சந்திரமுகி 2’ பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர்.

அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்..!” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால்.. திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

எம். எம். கீரவாணி

MM Keeravani goes sleepless for two months to compose for ‘Chandramukhi 2’

டைட்டில் செமயா இருக்கே.: மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.; காமெடி வாரிகளுடன் கூட்டணி

டைட்டில் செமயா இருக்கே.: மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.; காமெடி வாரிகளுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இதில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

ஒத்த ஓட்டு முத்தையா

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால்…

“சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன்.

ஒத்த ஓட்டு முத்தையா

மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார்.

6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஒத்த ஓட்டு முத்தையா

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர்.

பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

ஒத்த ஓட்டு முத்தையா

Goundamani to play protagonist in Otha Votu Muthaiya

More Articles
Follows