‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhan karkyபிரபலங்கள் என்றாலே அவர்களது மரணம் கூட ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும்.

அண்மையில் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் காலமானார்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாகவும், செலவுக்கு பணம் இல்லாததால் மரணம் அடைந்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்தன.

மேலும் அவருடையை குடி பழக்கமும் ஒரு காரணம் என தகவல்கள் வருகின்றன.

இதனை முற்றிலும் மறுத்துள்ள மற்றொரு பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளதாவது…

“அவர் மறைந்தாலும், அவர் எழுதிச்சென்ற பாடல்கள் இரண்டு வருடத்திற்கு வெளிவரும்” என்றார்.

‘எங்களை எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்களே…’ நயன்தாரா நாணம்

‘எங்களை எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்களே…’ நயன்தாரா நாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaவிக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் தொடங்கியது முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்டது.

மேலும் பல விழாக்களுக்கும் இருவரும் ஒன்றாக சென்று வந்தனர்.

இந்நிலையில் ஒரு பிரபல சேனல் ஒளிப்பரப்பிய விருது வழங்கும் விழாவில் இருவரும் நானும் ரவுடிதான் படத்திற்காக விருதுகளை பெற்றனர்.

அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது, நயன்தாராவின் பெயரை தொகுப்பாளர்கள் மிர்ச்சி சிவா மற்றும் சதீஷ் மாறி மாறி கூறிக் கொண்டே இருந்தனர்.

அதன்பின்னர் நயன்தாரா பேசும்போதும் இதே போன்று செய்தனர்.

நான் அவரு பெயரை சொல்லலாமா? என்று கேட்டுவிட்டு ‘எங்களை தான் எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்க… ? என்று நாணத்துடன் கூறினார் நயன்தாரா.

அப்போது அரங்கமே சிரப்பலையில் அதிர்ந்தது.

விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கரின் விருந்து

விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கரின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarபெரும் எதிர்பார்ப்பில் உருவான ரஜினியின் ‘கபாலி’ படம் 25வது நாளை கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விரைவில் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

தற்போது இதன் டீசர் எடிட்டிங் பணி நடைபெற்று வருகிறதாம்.

எனவே மிகவிரைவில் இதன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவிருக்கிறதாம்.

இது ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் தரும் மாபெரும் விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிம்புவின் AAA பட டீசர் வெளியீட்டில் ஒரு புதுமை

சிம்புவின் AAA பட டீசர் வெளியீட்டில் ஒரு புதுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu in aaa shootingஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன்’.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இதில் சிம்பு 3 கெட்டப்களில் நடிக்கிறார் சிம்பு. இதில் உள்ள மதுரை மைக்கேல் கேரக்டரின் புகைப்படம் பர்ஸ்ட் லுக்கில் வெளியானது.

இதனையடுத்து விரைவில் இந்த கெட்டப்பில் உள்ள டீசரை வெளியிடவிருக்கிறார்களாம்.

அதன்பின்னர் மீதமுள்ள இரண்டு கேரக்டர்களும் ஒவ்வொரு டீசராக வெளியிட இருக்கிறார்களாம்.

விஜய்-விக்ரம் பட தயாரிப்பாளருடன் இணைந்த ரெமோ

விஜய்-விக்ரம் பட தயாரிப்பாளருடன் இணைந்த ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyanவிஜய் நடித்த புலி மற்றும் விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை தயாரித்தவர் ஷிபுதமீன்ஸ்.

இவர் தயாரித்துள்ள இருமுகன் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் கேரள உரிமையை பெற்று இருக்கிறாராம்.

ரஜினி, விஜய், உள்ளிட்ட நடிகர்களின் படங்களை போலவே சிவகார்த்திகேயனுக்கும் தற்போது கேரளாவில் மார்கெட் உருவாகி வருகிறது.

எனவே அதிக திரையரங்குகளில் ரெமோ படத்தை ஷிபுதமீன்ஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்தம் செய்யும் சூர்யா… பொதுமக்கள் திருந்துவார்களா?

சுத்தம் செய்யும் சூர்யா… பொதுமக்கள் திருந்துவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya clean pallikaranai area in chennaiகுப்பை போட்டு வீதியை அசுத்தம் செய்பவனை கௌரவமாகவும் குப்பை பொறுக்கி வீதிகளை சுத்தம் செய்பவனை கேவலமாகவும் பார்க்கிறோம்.

எனவேதான் சாலைகள் நாளுக்குள் நாள் குப்பைக் கூடாரமாக மாறிவருகிறது.

இந்நிலையில் மற்ற நாயகர்களை போல் திரைப்படங்களில் சுத்தம் செய்வதை பற்றி கூறிக்கொண்டிருக்காமல், தானாகவே முன்வந்துள்ளார் ரியல் ஹீரோ சூர்யா.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணி என்ற இடத்தில் உள்ள குப்பை கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் சூர்யா.

இவரின் இந்த செயல் வெகுவாக மக்களை கவர்ந்துள்ளது.

இனியாவது இவரை பார்க்கும் ரசிகர்களும் பொதுமக்களும் திருந்தினால் நாடு சுத்தமாகும்.

More Articles
Follows