இரட்டை உலக வாழ்க்கையை சொல்லும் ‘பொம்மை’ – கவிஞர் மதன் கார்க்கி

இரட்டை உலக வாழ்க்கையை சொல்லும் ‘பொம்மை’ – கவிஞர் மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி நடித்துள்ள படம் ‘பொம்மை’.

இந்த படம் ஜூன் 16ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது…

டிஜிட்டல் கம்பெனிகள் இப்போது வர்ச்சுவல் ரியாலிட்டி எனும் புது உலகத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு வேறு நாடுகளில் இருப்பவர்கள் ஒன்றாக விளையாடலாம்.

ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு எது உண்மை உலகம் என்பது தெரியாத குழப்பம் வந்துவிடும் , மனரீதியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாதிரி இரட்டை உலகத்திற்குள் வாழ்வதாக தான் அறிவியல் சொல்கிறது.

அதை மிக அழகாக ஒரு கதைக்குள் கொண்டு வந்து நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ராதா மோகன். ஒவ்வொரு முறையும். ராதா மோகன் சார் புதிதாக முயற்சி செய்கிறார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக நடிகைகள் பொம்மை மாதிரி இருக்கிறார்கள் என்பார்கள்.

இந்த படத்தில் பொம்மையாகவே வாழ்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர். SJ சூர்யா சார் இத்தனை வருடத்தில் அவரது முயற்சிகள் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது. இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். தொழில் நுட்ப குழுவில் ஒவ்வொருவரும் உண்மையாக உழைத்துள்ளனர். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Lyricist Madhan Karki talks about Bommai movie songs

ஷாட் வச்சவுடனே வேற ஆளாக மாறிடுவார் எஸ்.ஜே. சூர்யா; ஷாக்கிங் சாந்தினி

ஷாட் வச்சவுடனே வேற ஆளாக மாறிடுவார் எஸ்.ஜே. சூர்யா; ஷாக்கிங் சாந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”.

மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்

இந்த சந்திப்பில் நடிகர் டவுட் செந்தில் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நான் டிவி சேனல் மூலமாகத்தான் பிரபலம் ஆனேன், இயக்குநர் ராதா மோகன் சாருடன் இது எனக்கு மூன்றாவது படம்.

எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது பெரிய வரம், அவருடன் பணி புரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது, பிரியா பவானி சங்கர் மேடம் கியூட்டாக நடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் படத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார், என்னையும் அழகாக காட்டியுள்ளார். படத்தின் ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி.

நடிகை சாந்தினி பேசியதாவது…

இந்தப் படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, எஸ் ஜே சூர்யா சாருடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, இயக்குநர் ராதா மோகன் சாருக்கு இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ் ஜே சூர்யா சார் ஷாட் ஆரம்பித்தவுடன் வேறு ஒரு ஆளாக மாறி விடுவார், பிரியாவிற்கும் எனக்கும் காட்சிகள் இல்லை ஆனால் இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும், ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது நீங்கள் பார்த்துவிட்டுக் கூறுங்கள் நன்றி,

Chandhini speech at Bommai movie press meet

தான்யா – டேனியல் – ஜிப்ரானுக்கு தான் வேலை.; மிஷ்கினை பேரை ஜேபி காப்பாற்றுவார் – பாக்யராஜ்

தான்யா – டேனியல் – ஜிப்ரானுக்கு தான் வேலை.; மிஷ்கினை பேரை ஜேபி காப்பாற்றுவார் – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கத்தில் தான்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘BP180’.

இப்பட பூஜையில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் எனக்கு மிகப் புதுமையான ரோல், க்ரைம் திரில்லர் கதை. ஜேபி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப்படம் ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது…

தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இந்தக்கதையை 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார்.

இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது. கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில்.

மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஜே பி பேசியதாவது..

இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன்.

ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Actor Bhagyaraj speech at BP 180 movie launch

நடிகர்கள் :

❖ தான்யா ரவிச்சந்திரன்

❖ டேனியல் பாலாஜி

❖ K.பாக்யராஜ்

❖ தமிழ்

❖ அருள் தாஸ்

தொழில் நுட்பகுழு

தயாரிப்பு – ATUL INDIA MOVIES

தயாரிப்பாளர் – அதுல் M போஸமியா

எழுத்து இயக்கம் – ஜேபி

இசை – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – ராமலிங்கம்

கலை இயக்கம் – A.R.மோகன்

எடிட்டிங் – இளையராஜா

புரடக்சன் எக்ஸ்க்யூட்டிவ் – திருநீலகண்டன்

மேக்கப் – ராம் பாபு

உடை வடிவமைப்பு – நாகா சத்யா

பப்ளிசிட்டி டிசைன்ஸ் – 8B STUDIOS

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

என்னை எப்படி செலக்ட் செஞ்சாங்கன்னே தெரியல..?; டென்ஷனில் டேனியல் பாலாஜி

என்னை எப்படி செலக்ட் செஞ்சாங்கன்னே தெரியல..?; டென்ஷனில் டேனியல் பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கத்தில் தான்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘BP180’.

இப்பட பூஜையில் நடிகை நைனி சாவி பேசியதாவது…

எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…

வெளி மாநிலத்திலிருந்து இங்குப் படம் தயாரிக்க வந்துள்ள, தாயரிப்பாளர் அதுல் அவர்களுக்கு வாழ்த்துகள், படத்தின் கதையைக் கேட்டேன், படம் ஆக்சன் படமாக இருக்கும், பாக்யராஜ் சார் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படம் நன்றாக வரும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகர் டேனியல் பாலாஜி பேசியதாவது…

என்னை எப்படி இந்தப் படத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை, இந்தக்கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, உங்களுக்குப் பிடிக்குமாறு படம் செய்வோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

I don’t know how they selected me for BP 180 says Daniel Balaji

BP கதையை JP சொல்ல சொல்ல அட்டகாசம்.; ஜிலிர்ப்பில் ஜிப்ரான்

BP கதையை JP சொல்ல சொல்ல அட்டகாசம்.; ஜிலிர்ப்பில் ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸமியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸமியா பேசியதாவது…

இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது…

அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.

Music composer Ghibran speech at BP 180 movie launch

பிற்படுத்தப்பட்ட பழங்குடியின ‘நாயாடி’-களின் வாழ்வை சொல்லும் படம்

பிற்படுத்தப்பட்ட பழங்குடியின ‘நாயாடி’-களின் வாழ்வை சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி’ ஜூன் 16 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லரான இதில் அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரி நாயகியாக நடிக்கிறார். பிரபல யூடியூபரான ஃபேபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது குறித்து பேசிய ஆதர்ஷ் மதிகாந்தம்…

“திரைத் துறையில் பங்காற்ற வேண்டும் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு ‘நாயாடி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன்.

திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்.

பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம்
விவரிக்கும்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்..

“நாயாடி இனத்தை சேர்ந்த ஒருவர் ஐஏஎஸ் படித்து முடிப்பதற்குள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டார் என்பதை பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் தனது ‘நூறு சிம்மாசனங்கள்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களது வரலாறு இதுவரை திரையில் சொல்லப்படவில்லை. ‘நாயாடி’ திரைப்படம் இதை பூர்த்தி செய்யும்,” என்றார்.

மாளவிகா மனோஜ், அர்விந்த்சாமி, நிவாஸ் எஸ் சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘பரிதாபங்கள்’ குழுவினரின் திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அருண் ‘நாயாடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை மோசஸ் டேனியலும் படத்தொகுப்பை சி எம் இளங்கோவனும் செய்துள்ளனர். புரூஸ் லீ ராஜேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘நாயாடி’ திரைப்படத்தை வரும் ஜூன் 16
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

Aadharsh Madhikaandham produces directs and plays protagonist in Naayaadi

More Articles
Follows