தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம் இயக்கி, நடித்த தங்கமீன்கள் படத்தில் அவரின் மகள் செல்லம்மா கேரக்டரில் நடித்தவர் பேபி சாதனா.
இவர் தற்போது கொஞ்சம் வளர்ந்து மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் மாற்றுதிறனாளியாக நடித்துள்ளார்.
இதில் மம்முட்டி, அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
துபாய் நாட்டில் வசித்து வரும் சாதனா, நடிப்போடு படிப்பையும் தொடர்ந்து வருகிறார்.
மேலும் சில சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
துபாயில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் ஸ்பீச் தெரப்பி, நடனம் போன்ற கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டும் வகையில் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.