பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

periyar kutthu songரமேஷ் தமிழ்மணி இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ளது ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பம்.

இந்த பாடலை சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

இந்த பாடலின் முன்னோட்டமாக 45 நொடிகள் நிறைந்த ஆல்பத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

இப்பாடலின் வரிகள் சமீப கால அரசியலை தோலுரிக்கும்படியாக அமைந்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.

முழு பாடலையும் கேட்க ஆவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மேலாக அரசியல்வாதிகள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இப்பாடல் வெளிவர உள்ளது.

தீபன் பூபதி இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

suriya 37கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்க உள்ளார்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில்,
இப்படத்தின் மற்ற இரண்டு கேரக்டர்களில் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

stun sivaபல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன்ட் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது.

ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.

ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தமிழ்ப்படம் தலைப்பு மாற்றம்

ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தமிழ்ப்படம் தலைப்பு மாற்றம்

thamizh padam 2தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்தனர் நடிகர் சிவா மற்றும் சிஎஸ். அமுதன் கூட்டணி.

தற்போது இதன் 2ஆம் பாகத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பிலேயே தமிழ்ப்படம் 2.0 என்று வைத்து ரஜினியின் 2.0 படத்தையும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

இதனிடையில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ‘தமிழ்ப்படம் 2.0’ திரைப்படத்தின் டைட்டில் ‘தமிழ்ப்படம் 2’ என்று மாற்றியுள்ளனர்.

புள்ளிக்கு பின்னர் வரும் ஜீரோவுக்கு மதிப்பில்லை என்ற கணித கோட்பாட்டின்படி அந்த ஜீரோவை படத்தின் டைட்டில் இருந்து தூக்கிவிட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தி திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்களும் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டிலும் நடித்துள்ளனர்.

அமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது

அமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது

3 idiots stillsராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸான ஹிந்திப் படம் ‘3 இடியட்ஸ்’.

அமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார்.

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாகத் தெரிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி.

கதையாசிரியர் அபிஜித்துடன் சேர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதத் தொடங்கிவிட்டாராம் அவர்.

தற்போது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான ‘சஞ்சு’ படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி.

இந்த படத்தை தொடர்ந்து ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப் போகிறாராம்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டுதான் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார்.

ஏற்கெனவே இதன் 2ஆம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு

என் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு

Shanthanu praises Vijay and his look in Sarkar first look Posterசினிமாவில் உள்ள நட்சத்திரங்களே விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதில் முக்கியமான சிலர் அடிக்கடி தங்களை விஜய் ரசிகர்களாகவே காட்டிக் கொண்டு பெருமிதம் கொள்வர்.

அவர்களில் ஜிவி. பிரகாஷ், சிபிராஜ், சாந்தனு முக்கியமானவர்கள்.

இந்நிலையில் விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதனை பார்த்த நடிகர் சாந்தனு… அந்த போஸ்டரை தன் ட்விட்டரில் பகிர்ந்து என் பொண்டாட்டியை கூட நான் இவ்வளவு ரசிக்கல. அப்படி உங்களை ரசிக்கிறேன் விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

சாந்தனுவின் திருமணத்தை விஜய்தான் தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Shanthanu praises Vijay and his look in Sarkar first look Poster

sarkar 1st

More Articles
Follows