தன் உலகை தேடி வந்து பெண் ஜெயிக்கும் கதை.. – பாடலாசிரியர் மதன் கார்க்கி

தன் உலகை தேடி வந்து பெண் ஜெயிக்கும் கதை.. – பாடலாசிரியர் மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது…

டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம்.

அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Madhan Karky speech at 5678 press meet

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் வெப் சீரிஸ் பிரஸ் மீட்டில் மிருதுளா பேச்சு

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் வெப் சீரிஸ் பிரஸ் மீட்டில் மிருதுளா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர்.

முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர்.

முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்

இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசியதாவது..

இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இங்கு நிறையப் பிரபலங்கள் வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி.

இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி.

இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Mrudhula Sridharan speech at 5678 press meet

கமல்ஹாசன் – எச் வினோத் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி..

கமல்ஹாசன் – எச் வினோத் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் மெகா பிளாக்பஸ்டர் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

கமல், அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்க்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘KH233’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதிக்கு மீண்டும் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு கமல்ஹாசனுடன் இணைந்து ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Vijay Sethupathi to join Kamal Haasan-H Vinod alliance

சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பு.; கலகத் தலைவனை வாழ்த்திய தமிழக முதல்வர்

சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பு.; கலகத் தலைவனை வாழ்த்திய தமிழக முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”.

நாயகியாக நிதி அகர்வால் நடிக்க வில்லனாக ஆரங் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

‘வாத்தி’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வருகிறார் தனுஷ்

‘வாத்தி’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வருகிறார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் டிசம்பர் 2 ரிலீஸ் தேதியை மாற்றி அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17 நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush film vaathi to release on sivakarthikeyan’s birthday

நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் கர்ப்பமாக இருக்கிறாரா ?

நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் கர்ப்பமாக இருக்கிறாரா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘முருங்காக்கை சிப்ஸ்’ தயாரிப்பாளரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு, மகாலட்சுமி திருமணமான மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருக்கலாம் என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது.

இருவரும் அடிக்கடி வெளியில் சென்று அதனை பிறகு போஸ்ட் செய்வது வழக்கம் .

சமீபத்திய போஸ்ட் பார்க்கும்போது மஹாவின் வயிற்றில் குழந்தை இருப்பது போன்று தோன்றுகிறது.

இருப்பினும், வெளிப்படையாகப் பேசும் தம்பதிகள் இது குறித்து வாய் திறக்கவில்லை, நடிகைக்கு ஏற்கனவே முந்தைய திருமணத்தில் ஒரு மகன் உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows