தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல மொபைல் நிறுவனமான லைகா தற்போது இந்திய சினிமாவில் பல மொழி படங்களை தயாரித்து வருகிறது.
ரஜினி நடிக்கும் 2.0 மற்றும் கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
சிரஞ்சீவி நடிக்க கத்தி ரீமேக்கையும் தெலுங்கில் தயாரிக்கின்றனர்.
மேலும் கத்தியை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம்.
இப்படத்தை ‘தூங்கா நகரம்’ மற்றும் ‘சிகரம் தொடு’ படங்களின் இயக்குநர் கெளரவ் இயக்கவிருக்கிறார். நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படம் என்ற முடிவில் இருக்கிறாராம் உதயநிதி.