நீங்க கேப்டன்; உங்களுக்கும் ஷங்கருக்கும் பொறுப்புள்ளது..; கமலுக்கு லைகா கடிதம்

Kamal Shankarலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் படம் இந்தியன் 2.

இதன் சூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து லைகா நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார் கமல்.

நாயகன் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

படப்பிடிப்பில் விபத்து நடந்தால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் கமல்.

தற்போது கமலுக்கு விளக்கம் அளித்து லைகா கடிதம் அனுப்பியுள்ளது.

அதில்….

உங்களின்(கமல்) கடிதம் கிடைக்கப் பெற்றோம். பிப்., 19 சம்பவத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடுகளும் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தங்களின் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்தோம். இது உங்களின் கவனத்திற்கு வராமல் போனது துரதிர்ஷ்டமானது.

லைகா நிறுவனம் உலகதரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது.

இதில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களான நீங்களும், ஷங்கரும் தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக இருந்தீர்கள்.

பாதுகாப்பு விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்பாடாது என நாங்கள் நம்பினோம். முழு படப்பிடிப்பும் உங்கள் இருவரது கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது.

இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கும் நாங்கள், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் என நீங்கள் நம்புவீர்கள் என எதிர்பார்த்தோம்.

இதற்காக எங்களது நிறுனவனத்தின் சார்பில் சுந்தர்ராஜன், மணிகண்டன் என்ற விமலை இருவரை நியமித்துள்ளோம். படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் விதமாக அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம்.

3 பேரின் இறப்பு அந்த குடும்பத்தினருக்கு எதிர்பாராத இழப்பு. இதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும், அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்கவும் ஆண்டவனை நாம் அனைவரும் வேண்டுவோம்.

இவ்வாறு லைகா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post