12 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காக இணையும் விஜய் – ஷங்கர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காக இணையும் விஜய் – ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தில் தனக்கான ஷூட்டிங் காட்சிகளை விஜய் முடித்து விட்டார். இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதன் பின்னர் தளபதி 69 படத்தில் விஜய்யை அட்லீ இயக்குவார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தளபதி 70’ படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நண்பன்’ படத்தில் இயக்குனர் ஷங்கர் – நடிகர் விஜய் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய 2 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதன் பின்னர் ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக் இயக்குவார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென விஜய் படத்தை ஷங்கர் இயக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷங்கர் விஜய் இணையும் படம் அரசியல் படமாக இருக்கும் எனவும் தகவல் வந்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

2024 பாராளுமன்ற தேர்தலையும் 2026 சட்டமன்றத் தேர்தலையும் நடிகர் விஜய் குறி வைத்து தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தனக்கு ஒரு அரசியல் திரில்லர் படம் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் கருதுவதால் இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay – Shankar unites after 12 years for Political thriller

தியேட்டரில் ஐபிஎல் மேட்ச்.. ஓடிடி-யில் ரிலீஸானாலும் ஷேர் வேண்டும்.; தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

தியேட்டரில் ஐபிஎல் மேட்ச்.. ஓடிடி-யில் ரிலீஸானாலும் ஷேர் வேண்டும்.; தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஜூலை 11ல் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் :

1. புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரம் கழித்து தான் ஓ.டி.டி.யில் திரையிட வேண்டும்.

2. ஓ.டி.டி.யில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. விளம்பர போஸ்டர்களுக்கு 1% சதவிகிதம் (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும்.

4. புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்குத் தொகையைக் கேட்க வேண்டும்.

5. திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் திரையிடும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.

6. மேலும் இனிவரும் காலங்களில் தமிழக திரையரங்குகளில் IPL கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்….

அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்.!

1) திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

2. திரையரங்குகள் வர்த்தக சம்மத்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

3. மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்குக் குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.

4. ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl matches should be allowed to be Theatre screened Theatre owners request to govt

JUST IN ரஜினி – கமல் – சிம்பு மறுக்க சிவகார்த்திகேயனுக்கு குரல் கொடுத்த பிரபலம்

JUST IN ரஜினி – கமல் – சிம்பு மறுக்க சிவகார்த்திகேயனுக்கு குரல் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.

இந்த படம் தமிழ் & தெலுங்கில் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது. பரத்சங்கர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க முக்கிய வேடங்களில் அதிதி, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

அப்போது அந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்ப்பதாக ஒரு காட்சி இருக்கும். அவர் ஏதோ ஒரு குரலை கேட்பதாக அந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது அந்த குரல் யாருடையது என்பது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த குரலுக்கு சொந்தக்கார விஜய்சேதுபதி.

மாவீரனுக்கு குரல் கொடுத்த மக்கள் செல்வனுக்கு நன்றி என சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த குரலை கொடுக்க ரஜினி கமல் சிம்பு உள்ளிட்டோரை படக்குழு அணுகியதாகவும் அவர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் ஏற்கனவே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi voice over in Maaveeran

My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
– Sivakarthikeyan

#Maaveeran
#VeerameJeyam
#MaaveeranFromJuly14th https://t.co/Nobb7HOIhC

விஜய்சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்.; டைட்டில் என்ன.?

விஜய்சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்.; டைட்டில் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017இல் நித்திலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘குரங்கு பொம்மை’. இந்த படத்தில் விதார்த், பாரதிராஜா, டெலினா, இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பத்திரிக்கையாளர்களாலும் மக்களாலும் இந்த படம் பெரிய பாராட்டுகளை பெற்றதோடு நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.

இந்த படத்தில் வில்லன் குமரவேலுக்கு நாயகன் விதார்த் கொடுக்கும் தண்டனை பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் நித்திலன் வேறு எந்த படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி 2023 தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்திலன்.

இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டைட்டில் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஜய்சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

VJS50 Title Look is releasing Tomorrow

கமல் படம் ரி-ரீலீஸ் வெற்றி விழா.; கௌதம் வாசுதேவ் – ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்பு

கமல் படம் ரி-ரீலீஸ் வெற்றி விழா.; கௌதம் வாசுதேவ் – ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’.

இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார்.

கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் கடந்த ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

மேலும், ‘வேட்டையாடு விளையாடு’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vettaiyadu vilayadu movie re release success party

உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை.? மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசிய விஜய்

உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை.? மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் இன்று சந்தித்தார்.

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடைபெற்றது.

உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நிர்வாகிகளின் நலனை கேட்டறிந்தும் அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay consultation with Vijay MakkalIyakkam Administrators is complete

More Articles
Follows